Karuppu: சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. நியூ இயர் ஸ்பெஷலாக கருப்பு படக்குழு ரிலீஸ் செய்த நியூ போஸ்ட்டர்!

Karuppu New Poster: நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் தமிழில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் கருப்பு. இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள நிலையில், சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் தெய்வீகம் சார்ந்த கதைக்களத்தில் தயாராகிவரும் இப்படத்திலிருந்து நியூ இயர் ஸ்பெஷலாக புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Karuppu: சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. நியூ இயர் ஸ்பெஷலாக கருப்பு படக்குழு ரிலீஸ் செய்த நியூ போஸ்ட்டர்!

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்

Published: 

01 Jan 2026 17:48 PM

 IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவர்தான் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் அதிரடி ஆக்ஷ்ன் நடிப்பில் தயாராகிவரும் படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (R.J.Balaji) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படமாக இந்த கருப்பு அமைந்துள்ளது. இந்த படத்தில் சூர்யா, 2 வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த ஜோடியானது கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இப்படம் கடந்த 2025 தீபாவளிக்கு வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பின் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையாத காரணத்தால் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்பட்டது. அந்த வகையில் இன்று 2026 ஜனவரி 1ம் தேதியில் புத்தாண்டை கொண்டாடும் விதத்தில், ரசிகர்கள் எதிர்பார்த்த ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 2026 புத்தாண்டு ஸ்பெஷல்… அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

புத்தாண்டை முன்னிட்டு கருப்பு படக்குழு வெளியிட்ட புது போஸ்டர் பதிவு:

கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது :

நடிகர் சூர்யாவின் இந்த படமானது நீதி சார்ந்த கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா மற்றும் திரிஷாவுடன் நடிகர்கள் ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி நடராஜன், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தய் ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரோப்பாளர்.ஆர்.எஸ். பிரபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் கருப்பு படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில், 2வது பாடல் வரும் 2026 ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்னங்க நடக்குது பிக்பாஸ் வீட்டில்… மீண்டும் இணைந்த கம்ருதின் பார்வதி – கடுப்பாகும் சாண்ட்ரா

மேலும் இப்படமானது வரும் 2026 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்த தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த 2026ம் ஆண்டில் மட்டுமே சூர்யாவின் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. கருப்பு மற்றும் சூர்யா46 படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், சூர்யா47 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டு பதிவான மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்று.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..
வங்கி சேவைகள் முதல் சிம் கார்டு வரை... புத்தாண்டில் வரவிருக்கும் மாற்றங்கள்
புத்தாண்டை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. கட்டுப்பாடுகள் என்ன?
நாடு முழுவதும் அறிமுகமாகும் பாரத் டாக்ஸி.. இதன் சிறப்பம்சம் என்ன?