Cinema Rewind: இப்போதைய ஹீரோயின்கள் செம ஸ்மார்ட்.. சூர்யா கொடுத்த நச் பதில்!
Suriya : நடிகர் சூர்யா சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கல் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில், முன்னதாக நேர்காணல் ஒன்றில் படத்தில் எந்த நடிகையுடன் நடிக்கப் பிடிக்கும் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் பற்றிப் பார்க்கலாம்.

சூர்யா
தமிழ் சினிமாவில் சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர் சூர்யா (Suriya) . தந்தை சிவகுமாரின் (Shivakumar) நடிப்பைத் தொடர்ந்து சினிமாவில் நுழைந்த சூர்யா, ஆரம்பத்தில் துணை வேடத்தில் நடித்து வாழ்க்கையை தொடங்கினார். இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்தில் வெளியான “நேருக்கு நேர்” (Nerukku Ner) என்ற படத்தின் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பின் கடந்த 1998ம் ஆண்டு வெளியான காதலிலே நிம்மதி என்ற படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அதை அடுத்ததாகப் பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். இவருக்குத் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலத்தை வாங்கி கொடுத்த திரைப்படமாக அமைந்தது நந்தா (Nandha) . இயக்குநர் பாலா (Bala) இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதை அடுத்ததாக ஸ்ரீ, மௌனம் பேசியதே, பேரழகன், பிதாமகன் மற்றும் கஜினி என என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அதிரடி நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருந்தனர்.
சுமார் ரூ. 232 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட்டாகியிருந்தது. இந்நிலையில். முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சூர்யா,எந்த நடிகையுடன் நடிக்கப் பிடிக்கும் என்ற கேள்விக்கு மாறுபட்ட பதிலைக் கொடுத்திருப்பார். அதில் அவர் கதைக்கு ஏற்ற கதாநாயகிகள் இருந்தாலே போதும் எனக் கூறியிருந்தார். அதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
நடிகைகள் குறித்து சூர்யா சொன்ன விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் சூர்யாவிடம் தொகுப்பாளர், உங்களுக்கு எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்று கேட்டிருந்தார். அதற்கு சூர்யா, “நான் எந்த நடிகைகளுடன் என்றாலும் இணைந்து நடிப்பேன், அவர்கள் அந்த படத்தின் கதைக்களத்திற்கு ஒத்துபோனால் நிச்சயமாக அவருடன் நடிப்பேன். மேலும் எந்த நடிகைகளுக்கும் ஒரு நடிகையுடன் இன்னொரு நடிகைக்கு வேறுபாடு இருக்கும்.
நான் சிங்கம் படம் பண்ணும்போது அனுஷ்காவின் நடிப்பே மிகவும் பிடித்திருந்தது, அதில் அந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில், அவர் நடித்திருந்தார். மேலும் மாற்றான் படத்திலும் காஜல் அகர்வாலுடன் நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருந்தது. மேலும் இப்போது உள்ள நடிகைகள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.நிறைய மொழிகளில் படங்கள் பண்ணிக்கொண்டு இருப்பதால் தெளிவாக இருக்கின்றனர்.
மேலும் ஒரு படத்தில் ஒரு காட்சி இருக்கிறது என்றால் அதை எவ்வாறு வெளிப்படுத்தவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. சிலர் மற்ற மொழி படங்களில் நடிக்கின்றனர், அதனால் ஒரு டயலாக்கை எவ்வாறு வெளிப்படுத்தவேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருக்கிறது. எதிலும் பயமில்லாமல் அவர்கள் நடிக்கின்றனர். தற்போதுள்ள நடிகைகள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர் என்பதைப் பற்றி கே.வி. ஆனந்த் சார் கூட சொல்வார்” என நடிகர் சூர்யா ஒபனாக பேசியிருந்தார்.