நோ சிலம்பரசன்… நோ ரஜினிகாந்த்… இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து இவரதான் இயக்கப் போறாரா?
Director Ramkumar Balakrishnan: தமிழ் சினிமாவில் பார்க்கிங் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன். இந்தப் படம் தேசிய விருதுகளைப் பெற்ற நிலையில் அடுத்ததாக இவர் யாரை இயக்க உள்ளார் என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பார்க்கிங். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி இரண்டு தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே காம்பவுண்டில் வாடகை வீட்டில் வாழ்கிறார்கள். அங்கு பார்க்கிங் பிரச்ச்னை ஏற்படுகிறது. அது பார்க்கிங் பிரச்சனையை தாண்டி ஈகோ பிரச்னையாக மாறி அவர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதை மையமாக வைத்தே இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எந்த நடிகரின் படத்தை இயக்க உள்ளார் என்று பல கேள்விகள் இருந்தது. தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் படம் அல்லது ரஜினிகாந்த் படத்தை இயக்குவார என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருமே இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து இவரதான் இயக்கப் போறாரா?
சூர்யா இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் ஒரு படத்தில் இணையவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக சூர்யா தேர்ந்தெடுக்கும் இயக்குநர்கள் மிகச் சரியானவர்களாக இருக்கிறார்கள். அவர் நிச்சயமாக சரியான பாதையில் செல்கிறார்.
இயக்குநர் ராம்குமார் ஆரம்பத்தில் சிலம்பரசன் டி.ஆருடன் ஒரு படம் செய்யவிருந்தார். பின்னர் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஒரு கதையை விவரித்தார், பிறகு சிவகார்த்திகேயனை அணுகினார், இப்போது சூர்யாவை அணுகியுள்ளார். குறைந்தபட்சம் இந்தப் படமாவது உறுதியாகத் தொடங்கும் என்று நம்புகிறோம்.
Also Read… இதுதான் பெண்களுக்கான சுதந்திரமா? தி கேர்ள்ஃப்ரண்ட் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya is expected to join hands with director #RamkumarBalakrishnan for a film, says vp..🤝🔥 #Suriya’s choice of directors lately has been spot on..👌 He’s definitely on the right path..🤝
Director Ramkumar was initially supposed to do a film with #SilambarasanTR.. He later… pic.twitter.com/zIwBwpFwMs
— Laxmi Kanth (@iammoviebuff007) January 13, 2026
Also Read… இந்த போட்டோவில் இருக்கும் குட்டி பாப்பா யார் தெரியுமா? இவரின் முதல் தமிழ் படம் தனுஷ் கூட தான்!