karuppu: பட்டாச கொளுத்துங்கடா.. சூர்யாவின் கருப்பு படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!
Karuppu Overseas Rights: தமிழ் சினிமாவில் 2026ம் ஆண்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் கருப்பு. இதில் சூர்யா ஆக்ஷன் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், 2026 மே 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பிரபலம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கருப்பு திரைப்படம்
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில், இந்த 2026ம் ஆனதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதில் சூர்யா ஆக்ஷன் மற்றும் தெய்வீக நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணனும் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த ஓஜி ஜோடியானது கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கருப்பு படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த கருப்பு திரைப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட ரூ 120 கோடி பெட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளதாம். இதற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் அனைத்தும் தீயாக பரவிவருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியிடுவதற்காக படக்குழு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பிரபலம் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது வேறு எந்த நிறுவனமும் இல்லை, ஜன நாயகன், ரெட்ரோ போன்ற படங்களின் ரிலீஸ் உரிமையை பெற்ற அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் (Ahimsa Entertainment). இந்நிறுவனம் பல கோடிகளைக் கொடுத்து, கருப்பு பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாம்.
இதையும் படிங்க: திரையரங்குகளில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கர படம்… கொண்டாடும் படக்குழு
கருப்பு திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த அறிவிப்பு பதிவு:
START THE FIREWORKS!
🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨@boleyncinemauk & #AhimsaEntertainment bring you #Karuppu from MAY 14 — across the BIGGEST screen count UK & Europe has ever seen for you, Suriya na 🫂You’re not just our hero. You’re not just our star. You are family — in our hearts,… pic.twitter.com/wF0I9zAC8R
— Ahimsa Entertainment (@ahimsafilms) May 2, 2026
இந்த 2026ம் ஆண்டில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமானது இணையத்தில் கசிந்து பெரும் அதிருப்தியை கொடுத்திருந்தது. இதையடுத்து அனைவரும் எதிர்பார்க்கும் படமாக சூர்யாவின் கருப்பு திரைப்படமானது அமைந்திருந்தது. இந்த படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், சமீபத்தில் இதன் இசைவெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இதில் பல்வேறு நட்சத்திரங்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்திருந்தனர்.
இதையும் படிங்க: ஜனநாயகன் பட லீக் விவகாரம்.. கைதான 9 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இப்படத்தில் சூர்யாவுடன் நடிகர்கள் யோகி பாபு, ஷிவதா, ஸ்வாசிகா, திரிஷா, அனகா மாயா ரவி, ஆர்.ஜே.பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆக மொத்தத்தில் மிகவு பிரம்மாண்டமான படமாக இது தயாராகியுள்ள நிலையில், சூர்யாவிற்கு வெற்றிப்படமாக இது அமையும் என கூறப்படுகிறது. அந்த வகையில் வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.