Coolie : சவுண்ட ஏத்து தேவா வாராரே.. ரஜினிகாந்த்தின் கூலி பட முதல் பாடல் வெளியீடு!

Coolie Movie Chikitu Music Video : ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் கூலி. பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்திலிருந்து சிக்கிடு வைப் மியூசிக் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இப்பாடல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Coolie : சவுண்ட ஏத்து தேவா வாராரே.. ரஜினிகாந்த்தின் கூலி பட முதல் பாடல் வெளியீடு!

கூலி பட முதல் பாடல்

Published: 

25 Jun 2025 18:14 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth ) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) தயாரிக்க, பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இந்த படமானது ரஜினிகாந்த்தின் 171- வது திரைப்படமாகக் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் நிலையில், அவரின் மகள் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பான் இந்திய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.  இந்த படம் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகர்கள் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரரா, சௌபின் சாஹிர் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் (Aamir Khan)  நடித்துள்ளார்.

இந்நிலையில், பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் இந்த கூலி வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு முதல் பாடலை வெளியிட்டுள்ளது. சிக்கிட்டு (Chikitu Music Video)  என்ற மியூசிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் மற்றும் நடிகர் டிஆர் ராஜேந்திர் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படக்குழு வெளியிட்ட முதல் பாடல் பதிவு :

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் :

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் அந்தந்த மொழி முன்னை நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். பல வருடங்களுக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தின் முழு ஆக்ஷ்ன் திரைப்படமாக இந்த கூலி உருவாகியிருக்கிறது. இந்த படமானது விறுவிறுப்பான கதைக்களத்துடன் தயாராகியிருக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்திருக்கும் இப்படமானது சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமான நிலையில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த படம் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புப் பாடலில் பூஜா ஹெக்டே :

பொதுவாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் நடிகைகள் சிறப்பு நடனம் ஆடமாட்டார்கள். ஆனால் இந்த கூலி படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். இந்த பாடலானது ரஜினிகாந்த்தின் பழைய படத்தின் பாடல் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

இந்த பாடலுக்காக நடிகை பூஜா ஹெக்டே சுமார் ரூ 3 கோடிகள் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவிருக்கும் நிலையில், ரிலீசுக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.