நான் கண்ணால பாத்த அதிசிய மனிதர் இளையராஜா – ரஜினிகாந்த் புகழாரம்
50 Years of Ilaiyaraaja: இசைத் துறையில் 50 ஆண்டுகளைக் கடந்து என்றும் இசைஞானி என்ற பெருமையுடன் இருப்பவர் இளையராஜா. இவருக்கு தமிழக அரசு சார்பில் இன்று விழா ஒன்று பிரமாண்டமாக நடத்தப்படது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

இளையராஜா
இசைஞானி இளையராஜாவிற்கு இன்று தமிழக அரசு சார்பில் விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் பிரபலங்களும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) என்ன பேசினார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக இருந்துக்கொண்டு புதிய பழைய எதிர்கட்சிகளுக்கு ஒரு சவாலாக இருந்துக்கொண்டு வாங்க 2026-ல் பார்த்துக்கொள்ளலாம் என்று தனக்கே உரிய புன்னகையோடு செயல்படும் தமிழக முதல்வர் எனது நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம் என்று தனது பேச்சை தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தொடர்ந்து பேசிய அவர் இசைஞானி இளையராஜா சிம்பொனியில் சாதனைப் படைத்தபோது அவரை அரசு மரியாதுடன் வரவேற்று அவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். எளிய பிரமாண்ட மனிதரான இளையராஜாவிற்கு இவ்வளவு பெரிய பிரமாண்ட விழா நடத்தியதற்கு என் மனமார்ந்த நன்றியை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இளையராஜா குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்:
அந்த வகையில் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் அதிசிய மனிதர்களை புராணக் கதைகளில் பார்த்து இருக்கேன். ஆனா நான் கண்ணால் பார்த்த அதிசிய மனிதர் இளையராஜாதான். இங்க நான் சாமினு கூப்பிட்ற இளையராஜா பத்தி பேசுறதுனா எனக்கு நேரமே பத்தாது. ஆன நேரம் கருதி சுருக்கமாக பேசுறேன். இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயர் தமிழக மக்களின் ரத்தம் நாடி நரம்பில் ஊறிப்போயிருக்கு. அதற்கு காரணம் அவர் இசைதான்.
70, 80, 90களில் இளையராஜ இசையமைத்த பாடல்களை தற்போது வரும் படங்களில் 2 பாடல்கள் பயன்படுத்தினால் கூட அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகிடுது. இப்போ கூலில கூட அவரோட பாட்டு ரெண்டு பயன்படுத்தியிருக்கோம். அந்தமாதிரி இசையமைப்பாளரா எல்லாருக்கும் அவரப்பத்தி தெரியும் ஆனா ஒரு மாமனிதனா அவர எனக்கு தெரியும்.
இளையராஜாவின் இந்த 50 வருடப் பயணங்களில் அவரை நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக பார்த்து இருக்கேன். அப்படி ஒரு நாள் பார்த்தப்போ முடி எல்லாம் மொட்டை அடிச்சுட்டு வேஷ்டி ஜிப்பா போட்டுடு நெத்தில பொட்டோட பாத்தேன். என்னனு கேட்டப்போ இதுதான் ஒரிஜினல் சொன்னாங்க. அப்போ நான் அவர சாமினு கூப்பிட ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் அப்படிதான் கூப்பிடுகிறேன்.
Also read… டைரக்டர் வெற்றிமாறன் டூ டாக்டர் வெற்றிமாறன் – பட்டம் வழங்கி கௌரவித்த ஐசரி கணேஷ்
இளையராஜா சொன்னா எல்லாம் பழிக்கும்:
தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா ஒரு நாள் என்ன கூப்பிட்டு அவரது சகோதரர் பாஸ்கருக்காக ஒரு படத்தில் நடிக்கச் சொல்லி கேட்டார். நானும் சரினு ஒத்துக்கிட்டு நடிக்கிறேன் எனக்கு பாஸ்கரோட செயல்பாடுகளில் படம் வெற்றியடையும்னு தோனல. இளையராஜாவ பார்த்து சாமி எனக்கு இது ஒர்க்காகும் தோனல ஒரே டென்ஷனா இருக்குனு சொன்னேன்.
அதற்கு அவர் நான் இந்தப் படத்தோட கதையை படிகவே இல்லை. என்ன நம்புங்க இந்தப் படம் சில்வர் ஜூப்லி ஹிட் அடிக்கும் அப்படி இல்லனா நான் இனி இந்த ஹார்மோனிய பெட்டியையே தொடமாட்டேன். இந்த சினிமாவை விட்டு போயிடுறேன் சொன்னார். நான் பயந்துட்டேன்.
ஒருகட்டத்துல நான் முடிவு பன்னேன் படம் சரியா போகலனா நாமலே காசு செலவு செஞ்சு எப்படியாச்சும் சில்வர் ஜூப்லி ஹிட் கொடுக்கனும்னு. ஆனா அவர் சொன்ன மாதிரியே படம் ஹிட். அப்படி இளையராஜா சொல்றது எல்லாம் பழிக்கும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
Also read… தமிழில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சாய் பல்லவி – வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் ரஜினிகாந்தின் பேச்சு:
Superstar #Rajinikanth about CM Stalin:
“He is the star of Indian politics, ruling Tamilnadu. He challenged Old & New opposing parties to meet in the 2026 election with a smile. My Friend the honourable chief minister of Tamilnadu MK Stalin” pic.twitter.com/pVMESys0aa
— AmuthaBharathi (@CinemaWithAB) September 13, 2025