கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்

Sun TV Kayal serial Actress Subashini committed suicide : சன் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் கயல். இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் பிரச்சனை... தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை - சோகத்தில் ரசிகர்கள்

கயல் சீரியல்

Updated On: 

06 Apr 2026 12:11 PM

 IST

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது போல சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. தமிழக மக்களிடையே சின்னத்திரை சீரியல்களுக்கு பிரபலம் ஆனது சன் தொலைக்காட்சிதான். அதன்படி தொலைக்காட்சியில் வெளியாகும் சீரியல்களை தொடர்ந்து தமிழக மக்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் சீரியலாக இருக்கிறது கயல். இந்த சீரியலில் தனது குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்களை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் தொடர்ந்து தினமும் தொலைக்காட்சி மூலமும் இணையதள மூலமாகவும் ரசிகர்கள் அவர்களை பார்த்துக்கொண்டே இருப்பதுதான் காரணம்.

இதன் காரணமாகவே இந்த நடிகர்களின் சீரியலைப் போல அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கயல் சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நடிகை சுபாஷினி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்ட செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடனான பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை:

ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த நடிகை சுபாஷினி பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கயல் சீரியலின் படப்பிடிப்புகள் காரணமாக போரூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடிகை சுபாஷினி தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் கணவருடன் நேற்று இரவு வீடியோ காலில் பேசியபிறகு இந்த முடிவை எடுத்து இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செய்த் தற்போது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read… இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யும் கருப்பு படக்குழு – வைரலாகும் தகவல்

நடிகை சுபாஷினி இறுதியாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… ரஜினிகாந்த் மற்றும் விஜயிடம் உள்ள அதே ஸ்டைல் நயன்தாராவிடம் உள்ளது – இயக்குநர் விஷ்ணு எடவன்

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

Follow Us
Related Stories
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஆயிரத்தில் ஒருவன் – புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்… இயக்குநர் செல்வராகவன்
ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் – விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
OTT Movie: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?
Vignesh Shivan: துப்பாக்கியில் விஜய் சார் சுட்டது 12 பேர்.. ஆனால் 13வது சுடப்பட்டவன் நான்- விக்னேஷ் சிவன்!
Ranbir Kapoor: ராமாயணா படத்தில் ரெட்டை வேடத்தில் ரன்பீர் கபூர்.. 2வது கதாபாத்திரம் என்ன தெரியுமா?
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்