SIAA: தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் – நடிகர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி!

Tamil Producers Strike: தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (26/04/2026) நடைபெற்றிருந்தது. அதில் நடிகர்கள் வருமான பகிர்வு குறித்து பேசப்பட்டிருந்தது. அதனை முன்னிட்டு வரும் 2026 மே 2ம் தேதியில் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள நிலையில், இது குறித்து நடிகர்கள் சங்கத்தினர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

SIAA: தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் - நடிகர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி!

தமிழ் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்

Updated On: 

27 Apr 2026 21:17 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலங்களாக திரைப்படங்கள், நடிகர்கள் (Actors) மற்றும் தயாரிப்பாளர்களிடையே (producers) சில பிரச்சனைகள் இருந்துவருகிறது. மேலும் சமீபத்தில் ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படமானது இணையத்தில் கசிந்து, ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamil Film Producers Association) தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், அதில் ஜி.கே.எம் தமிழ்க் குமரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த வகையில் கடந்த 2026 ஏப்ரல் 26ம் தேதியில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், தமிழில் தற்போது ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்துவரும் நிலையில் , ஆந்திராவில் உள்ளதுபோலவே, நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் வருவாய் பகிர்வு முறையில், தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு, மட்டும் முன்னுரிமை கொடுத்து படங்களில் நடிக்கவேண்டும் என கூறப்பட்டது.

மேலும் தயாரிப்பாளர்கள் லாப மற்றும் நஷ்டங்களில் நடிகர்களும் பங்குகொள்ளவேண்டும் என கூறப்பட்டிடுந்தது. இதற்கு அடையாளமாக, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் வரும் 2026 மே 2ம் தேதியில் நடக்கும் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினர் (South Indian Actors’ Association) பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அகண்டா பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி? வைரலாகும் தகவல்

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பதில் கொடுத்த தென்னிந்திய நடிகர்கள் சங்கம் :

அந்த வகையில் நடிகர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையின்படி, “நடிகர்கள் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்ற்றம் சுமதி, அதையே காரணமாக வைத்து, மே 2ம் தேதியில் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறை என்றும் ஆதரித்தும் இல்லை, இனியும் ஆதரிக்காது. நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக, தங்கள் தரப்பிலிருந்து எந்தவொரு கடித்தமோ அல்லது மெயிலோ வரவில்லை” என தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் தனுஷின் கர படத்திற்கு வந்த சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஓடிடி ரிலீஸ் முறை:

மேலும் தமிழில் உருவாகும் திரைப்படங்கள் 8 வாரங்களுக்கு முன்பே ஓடிடியில் வெளியிடக்கூடாது என என சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைத்து வரும் 2026 மே 10ம் தேதியில் கூட்டம் நடத்தவுள்ளனர். வரும் 2026 மே 2ம் தேதியில் நடக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் முடிவு தெரியாவிட்டால், வேலை நிறுத்தம் தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?