Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன் – யார் தெரியுமா?

Actress Priyanka Mohan: நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நடிகயாக வலம் வருகிறார். இவர் தற்போது நடிகர் பவன் கல்யாண் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தெலுங்கில் முன்னணி நடிகருடன் ஜோடி சேர உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன் – யார் தெரியுமா?
நடிகை பிரியங்கா மோகன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2025 09:54 AM

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன் (Actress Priyanka Mohan). இவர் கன்னட மொழியில் 2019-ம் ஆண்டு வெளியான ஓந்த் கதே ஹெல்லா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் ஜி இயக்கியுள்ளார். இதில் தாண்டவ் ராம் மற்றும் சோமண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். நடிகை பிரியங்கா மோகன் கன்னட மொழி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில்தான் தற்போது அதிகமாக படங்களில் நடித்து வருகிறார். நடிகை பிரியங்கா மோகன் 2019-ம் ஆண்டே தெலுங்கு சினிமாவில் நானிஸ் கேங் லீடர் என்ர படத்தின் மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஸ்ரீகரம் என்ற படத்தில் நடித்தார். இதில் நாயகனாக நடிகர் ஷர்வந்த் நாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த நடிகை பிரியங்கா மோகன் கடந்த 2021-ம் ஆண்டு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வினய் ராய், அர்ச்சனா சந்தோக், யோகி பாபு, மிலிந்த் சோமன், ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், சுனில் ரெட்டி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மிகவும் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகை பிரியங்கா மோகன். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான எதர்க்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், டிக் டாக், தனுஷின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

நடிகை பிரியங்கா மோகனின் இன்ஸ்டா பதிவு:

தமிழில் இவர் இறுதியாக நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான ப்ரதர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனமாடியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை பிரியங்கா மோகான் தெலுங்கு சினிமாவில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ஓஜி படத்தில் நடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவின் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

உலகம் ஒருபோதும் மறக்காது! கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!
உலகம் ஒருபோதும் மறக்காது! கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!...
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்...
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்...
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!...
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!...
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!...
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்......
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?...
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!...
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!...