விறுவிறுப்பாக நடைபெறும் அல்லு அர்ஜுன் – அட்லி படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்

Allu Arjun and Atlee's Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் அட்லி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படத்தின் அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.

விறுவிறுப்பாக நடைபெறும் அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங்... வைரலாகும் தகவல்

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி

Published: 

15 Feb 2026 17:14 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக தனது பணியைத் தொடங்கிய அட்லி அதனைத் தொடர்ந்து ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்படி இயக்குநர் அட்லி இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜயை வைத்து அடுத்தடுத்தப் படங்களை இயக்கினார். அதன்படி இவர்களின் கூட்டணியில் வெளியான தெரி, பிகில் மற்றும் மெர்சல் என அந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவிற்கு சென்றார் இயக்குநர் அட்லி.

அதன்படி பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவாகி வரும் 22-வது படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் AA22xA6 படத்தின் ஷூட்டிங்:

அதன்படி அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. பண்டிகை காலங்களில் கூட இடைவெளி எடுக்காமல் படப்பிடிப்பைத் தொடர்ந்து வருகிறார். இந்த மாத இறுதி வரை அங்கு படப்பிடிப்பு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் இரண்டு நாள் இடைவெளி எடுத்துக்கொண்டு பிப்ரவரி 21 அன்று நடைபெறும் பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொள்ள கொச்சிக்குச் செல்வார் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… பாம்பு சட்டை படத்திற்கு மாநில விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் எக்ஸ் போஸ்ட்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பல தடைகளையும் தாண்டி தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயத்தை செய்த நாஞ்சில் விஜயன் – வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?