என்னுடைய முதல் விமர்சகர் அவர்தான் – நடிகர் சூரி ஓபன் டாக்
Actor Soori: தமிழ் சினிமாவில் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சூரி. காமெடியனாக தன்னை அறிமுகப்படுத்தி தற்போது நாயகனாக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சூரி தனது சிறந்த விமர்சகர் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

சூரி
நடிகர் சூரி (Actor Soori) இறுதியாக நாயகனாக நடித்து வெளியான படம் மாமன். ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்த நிலையில் படத்திற்கு திரைக்கதையை நடிகர் சூரியே எழுதி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் சூரி என்பது குறிப்பிடத்தக்கது. தாய் மாமன் மருமகன் செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியானதால் பாகஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை பெற்றது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோலாகலமான கதையில் நடித்ததாக நடிகர் சூரி மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் தற்போது பல நாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வருகின்றது. இதன் காரணமாகவே இன்னும் திரையரங்குகளில் படங்களை வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் படம் மண்டாட்டி.
இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி வருகிறார். ஸ்போர்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகின்றது. இதில் தமிழில் நடிகர் சூரி நாயகனாகவும் தெலுங்கு சினிமாவில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்தப் படம் மாமன் படத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு இருக்கும் என்பது படத்தின் போஸ்டரைப் பார்க்கும் போதே தெரிகிறது.
Also Read… சூரியாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!
என்னுடைய முதல் விமர்சகர் அவர்தான்:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூரி தனது படங்களுக்கு நேர்மையாகவும் எந்தவித பூசலும் இல்லாத விமர்சனத்தை கொடுப்பது எனது சகதரர் என்று அவருடன் இரட்டை சகோதரரை தெரிவித்துள்ளார். மேலும் தான் காமெடியனாக நடிக்கும் படங்களில் இருந்து தற்போது நாயகனாக நடிக்கும் படங்கள் வரை அனைத்திற்கும் நேர்மையான விமர்சனத்தை அவர் கூறுவார் என்றும் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகர் சூரி சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
எங்கள் ராஜாக்கூர் கிராமத்தில் திருவிழா இன்று மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக தொடங்கியது! 🎉❤️🙏💐💐💐 pic.twitter.com/iJVR7k3qaC
— Actor Soori (@sooriofficial) August 4, 2025
Also Read… வசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்திரா படம் எப்படி இருக்கு? ஆடியன்ஸ் கருத்து