பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகனுடன் மோதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி – ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Jana Nayagan VS Parasakthi : நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் - சிவகார்த்திகேயன்
நடிகர் விஜய்யின் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகி வரும் படம் ஜன நாயகன். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 11, 2025 அன்று வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்துடன் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் மோதவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிசில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பராசக்தி பட அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜன நாயகன் vs பராசக்தி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி. இந்தப் படம் தமிழகத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசைமைக்க, டான் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இந்தப் படம் ஜனவரி 14, 2026 அன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏற்கனவே தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமும் 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரு படங்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்த வாத்தி பட நடிகை.. வைரலாகும் போஸ்டர்!
பராசக்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பராசக்(தீ) பரவட்டும்🔥🔥
A stunning ride through history awaits#Parasakthi in Theatres from 14th January 2026@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya @supremesundar… pic.twitter.com/dCzBDn5AeC
— DawnPictures (@DawnPicturesOff) September 12, 2025
இதையும் படிக்க : ஜன நாயகன் படத்தில் 100 சதவீதம் விஜய்யிசம் இருக்கும்.. எடிட்டர் கொடுத்த அப்டேட்!
தளபதி விஜய் கடைசியாக நடித்து வெளியான தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் அந்தப் படத்தில் ஒரு காட்சியில் விஜய், சிவகார்த்திகேயனிடன் துப்பாக்கியை பிடிங்க சிவா என சொல்லும் வசனம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில் சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விட்டுத் தருகிறார் என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய், இளைய தளபதி என்று ரசிகர்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில் விஜய்யின் கடைசி படமும் சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் வெளியாகவிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.