Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட 3வது பாடல் புரோமோ.. பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா?
Parasakthi 3rd Single Promo : சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், 3வது பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் பராசக்தி
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீலீலா (Sreeleela) இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகை ஸ்ரீலீலா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சுதா கொங்காராவின் (Sudha Kongara) இயக்கத்தில் மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது இந்த பராசக்தி. இந்த படத்தின் ஷட்டிங் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் இறுதியில் நிறைவடைந்தயிருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவந்தது. இப்படத்திற்கு தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar) இசையமைத்துள்ளார்.
இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து அடி அலையே (Adi Alaiye) மற்றும் ரத்னமாலா (Rathnamala) போன்ற பாடல்கள் வெளியாகியிருந்தது. இப்பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் 3வது பாடலின் அதிரடி ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடலானது வரும் 2025 டிசம்பர் 14ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. நடந்தது என்ன?
பராசக்தி திரைப்படத்தின் 3வது பாடலின் ப்ரோமோ வீடியோ பதிவு :
Calls for a celebration ❤️🔥
‘Namakkana Kaalam’ – third single from #Parasakthi releasing on December 14th!
A @gvprakash musical 🎶
🔗 https://t.co/eImhwxaGq5#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash… pic.twitter.com/GMHBpEZmUX
— DawnPictures (@DawnPicturesOff) December 12, 2025
பிரம்மாண்டமாக நடைபெறும் பராசக்தி படத்தின் புரொமோஷன் பணிகள் :
இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் இப்படம் 1960ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்.. ஜெயிலர் 2 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!
மேலும் இப்படமானது தளபதி ஜன நாயகன் படத்திற்கு போட்டியாக வெளியீடும் விதத்தில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் மற்ற படங்களுக்கு இல்லாத ப்ரோமோஷன் பணிகள் இந்த பராசக்தி படத்திற்கு மிகவும் அதிகமாகவே இருக்கிறது என்று கூறலாம். இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.