Madharaasi: எகிறும் எதிர்பார்ப்பு.. சாதனைப் படைத்த மதராஸி ட்ரெய்லர்!

Madharaasi Trailer Surpasses 18 million Views : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் 23வது படமாக உருவாகியிருப்பது மதராஸி. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், 2 நாட்களில் சுமார் 18 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பான பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Madharaasi: எகிறும் எதிர்பார்ப்பு.. சாதனைப் படைத்த மதராஸி ட்ரெய்லர்!

மதராஸி படம்

Published: 

26 Aug 2025 14:12 PM

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR Murugadoss) இயக்கத்தில், 5 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள படம் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் முன்னணி ஹீரோவாக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்திருக்கும் நிலையில், அதிரடி வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்த வித்யுத் ஜம்வால் நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருக்கிறார். இந்த மதராஸி படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில், சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படமானது தற்போது வெளியீட்டிற்கு தயாராகியிருக்கிறது. இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதிமுதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதை முன்னிட்டு கடந்த 2025 ஆகஸ்ட் ஆகஸ்ட் 24ம் தேதி மாலையில், மதராஸி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரானது தற்போது சுமார் 18 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் (Amaran) படத்தின் ட்ரெய்லர் பார்வைகளைவிடவும், 30 மணிநேரத்தில் சுமார் 18 மில்லியன் பார்வையை கடந்து மதராஸி பட ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது. இது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கமலை திடீரென சந்தித்த ஜெயம் ரவி.. என்ன விஷயம் தெரியுமா?

மதராஸி படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் குறித்த பதிவு :

மதராஸி படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் என்ன தெரியும் :

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த மதராஸி படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த மதராஸி படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுடன் 8வது படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவரே கூறியிருந்தார். இந்த படத்திலிருந்து சலம்பல மற்றும் வழியிறனே என இரு பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : சூரியின் அதிரடி ட்ரான்ஸ்பர்மேஷன்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்களாக உள்ளதாம். இது பற்றி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட, ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தர சான்றிதழை கொடுத்திருக்கிறதாம். அதன் காரணமாக 16 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் மட்டுமே இந்த மதராஸி படத்தை பார்க்கமுடியும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், வரும் 2025 செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் மதராஸி பட ப்ரீ புக்கிங் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.