ஹீரோ லா உங்களுக்கு செட் ஆகாதுன்னு சொன்னாரு.. தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan About Producer Shirish: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் தயாராகிவரும் நிலையில், விரைவில் பராசக்தி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில், நிஞ்ஜா என்ற பட ஷூட்டிங் பூஜையில் கலந்துகொண்டார். அதில் தயாரிப்பாளர் சினிஷ் குறித்து அவர் பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.

Sivakarthikeyan And Sinish
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) வளர்ந்துவரும் நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக மதராஸி (Madharaasi)என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படம் கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் வெளியான நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கியிருந்த நிலையில் வித்யுத் ஜாம்வால் மற்றும் ருக்மிணி வசந்த் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை அடுத்ததாக சுதா கொங்கராவின் (Sudha Kongara)இயக்கத்தில் பராசக்தி (Parasakthi) படத்தில் நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நிஞ்ஜா (Ninja) என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் அந்த படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: காதல் ஒரு மென்மையான தென்றல் போல உணரும்போது… பராசக்தி படத்தில் இருந்து வெளியானது 2-வது சிங்கிள் புரோமோ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தயாரிப்பாளரை கலாய்த்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் அதில், ” நான் நெல்சன் திலீப்குமார் அண்ணாவுடன் வேட்டை மன்னன் படத்திற்காக உதவி இயக்குநராக பணியாற்றிவந்தேன், அப்படியே ஒரு பக்கம் ஒரு படத்தில் நகைச்சுவை வேடத்திலும் நடித்துவந்தேன். அவரின் ஸ்கிரிப்ட் என்றாலே பிப் வார்த்தை நிச்சயமாக இருக்கும். அப்படியே வேட்டைமன்னன் படத்தின் கதையை அவர் சொல்ல நான் மெரினா பீச்சில் இருந்து எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தயாரிப்பாளர் சினிஷ் என்னிடம் கேட்டார் , “அடுத்ததாக நீங்க என்னவாக விரும்புகிறீர்கள்?” என கேட்டார். அதற்கு நானும் சும்மா ஹீரோவாக போகிறேன் என சொன்னேன். உடனே அவர் என்னிடம் நீக்க ஹீரோவாக ஆசைப்படாதீர்கள், இதுபோன்றே காமடி ரோலில் படங்களில் நடிங்க என ஆவர் கூறினார்.
இதையும் படிங்க: வருத்தத்துடன் பூரிசேதுபதி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ!
நானும் அவரிடம் விளையாட்டாக நானும் ஹீரோவாகி காட்டுகிறேன் என கூறினேன். அவரிடம் அப்படி பேசிவிட்டு, சில வருடங்களில் நனையும் ஹீரோவாகிவிட்டேன். சினிஷ் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டு, நான் அவரிடம் பேசவில்லை என்று அவரே நினைத்துக்கொண்டார். பின் சில வருடங்களுக்கு முன் என்னிடம் தயாரிப்பாளர் சினிஷ் வந்து, நான் அன்று சொன்னதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என தெரிவித்தார்”. இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் காலகாலமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் ஷிரிஷ் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ பதிவு :
#Sivakarthikeyan:
“When I worked as AD of Nelson Anna for #VettaiMannan, we used to write script in Marina Beach, with Beep words from him😁. During that time I told producer Shirish that i want to become hero🌟. But he told ‘Edhuku ungalukku indha vela lam’😅. After I became a… pic.twitter.com/QL5UYZyot6— AmuthaBharathi (@CinemaWithAB) November 24, 2025
நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்ககளில் நடித்துவரும் நிலையில், பராசக்தி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார். இதன் காரணமாக இவரின் புது படங்களில் அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.