Sivakarthikeyan : குட்டி தளபதி.. திடீர் தளபதினு சொல்லுறாங்க.. – தளபதி விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!

Sivakarthikeyan About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் முன்னணி நடிப்பில் மதராஸி படமானது விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் குறித்து, சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியிருக்கிறார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Sivakarthikeyan : குட்டி தளபதி.. திடீர் தளபதினு சொல்லுறாங்க.. - தளபதி விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!

தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன்

Published: 

25 Aug 2025 14:44 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான அமரன் (Amaran) படமானது சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இவரின் முன்னணி நடிப்பில் வெளியான இந்த படமானது பான் இந்தியா அளவிற்கு நல்ல வரவேற்புகளை பெற்றிருந்தது. இதனையடுத்து  அவர் ஏ.ஆர். முருகதாஸ் (AR Murugadoss) இயக்கத்தில் மதராஸி (Madharaasi) என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த மதராஸி படமானது பான் இந்திய படமாக உருவாகியிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இணைந்து நடித்திருக்கிறார். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று 2025, ஆகஸ்ட் 24 ஆம் தேதியில் சென்னையில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், அந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னை திடீர் தளபதி மற்றும் குட்டி தளபதி என்று எல்லாம் அழைப்பது பற்றியும், தளபதி விஜய் (Thalapathy Vijay) குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசியது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : ராம் சரண் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு.. நடிக்க மறுத்த நடிகை!

தளபதி விஜய் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், ” தளபதி விஜய் சாருடன் கோட் படத்தில் துப்பாக்கி காட்சியில் நடித்த பிறகு, விஜய் சாரிடம் இருந்து எனக்கு நிறைய மோட்டிவேஷன் கிடைத்தது,. மேலும் அந்த காட்சியையும் நான் அப்படிதான் பார்த்தேன். ஆனால் என்னை பலரும் குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் கூறுகிறார்கள்.

ஆனால் நான் அவ்வாறு இல்லை. அவர் அடுத்த தளபதி என்று எண்ணி எனக்கு கொடுத்திருக்கமாட்டார். எப்போதும் அண்ணன் அண்ணன்தான்.. தம்பி தம்பிதான்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் , தளபதி விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். சிவகார்த்திகேயனின் பெருந்தன்மை குறித்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : 21 வயசுல என்ன நம்பி கத்தி படத்தை கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ் – அனிருத்!

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி பட ட்ரெய்லர் பதிவு :

சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் மதராஸி படம், முழுவதும் ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.