Sivakarthikeyan : மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் இதுவா?

Sivakarthikeyans Role In Madharaasi Movie :தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம் மதராஸி. இந்த படத்தில் இவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Sivakarthikeyan : மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் இதுவா?

சிவகார்த்திகேயன்

Published: 

19 Aug 2025 16:52 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) 23வது திரைப்படமாக உருவாகியிருப்பது மதராஸி (Madharaasi). இந்த திரைப்படமானது முழுவதும் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கிறது. இந்த படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இப்படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற இடங்களில் நடைபெற்று வந்தது.  சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இவர் விஜய் சேதுபதியின் ஏஸ் (Ace)படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்க, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரமும் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் “ரகு” என்ற பெயரில் நடித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அவரின் கதாபாத்திரம் பற்றியும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் ‘தமா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ!

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் :

சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், அதில் மதராஸி படம் பற்றிக் கூறியிருந்தார். அதில் அவர், “மதராஸியில் சிவகார்த்திகேயன் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மதராஸியில் அவரின் கதாபாத்திரம் சாதாரண மனிதர்களிடமிருந்து,  வித்தியாசமாக இருக்கும். அவரது கதாப்பாத்திரம் நிச்சயமாக மக்களுக்கும் பிடிக்கும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : சூர்யா 46 படத்தில் அனில் கபூரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கி அட்லூரி

மதராஸி படத்தின் அப்டேட் குறித்துப் படக்குழு வெளியிட்ட பதிவு

இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழ் மட்டுமில்லாமல், மலையாளம் , தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 2025ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகவுள்ள இப்படமானது நிச்சயமாக வெற்றி பெரும் என அவரின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது.