சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு படம் என்ன ஆனது? தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய விசயம்

Sivakarthikeyan and Venkat Prabhu Movie Update: தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக உள்ள படம் குறித்து பல வதந்திகள் வெளியாகி வந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்து உள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு படம் என்ன ஆனது? தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய விசயம்

வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன்

Published: 

01 May 2026 12:18 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் மதராஸி படத்தில் நடித்து கொண்டு இருந்த போது இயக்குநர் வெங்கட் பிரபு உடனான கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் மதராஸி படத்தில் நடித்து முடித்த உடன் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பர்க்கப்பட்டது. அதே நேரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் நடிகர் விஜயை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வந்தார்.

இவர் இருவரும் அடுத்தாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் சிவகர்த்திகேயன் தனது 25 படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் இணைந்து பராசக்தி படத்தில் பணியாற்றினார். அந்தப் படமும் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் சேயோன் படத்திற்காக சிவக்குமார் முருகேசன் உடன் கூட்டணி வைத்து அந்தப் படத்தில் நடித்து வருகின்றார்.

சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு படம் என்ன ஆனது?

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவில்லை என்றும் அதற்கு சம்பளம் தொடர்பான பிரச்சனையே காரணம் என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணியில் உருவாக இருந்த படத்தை தயாரிக்க இருந்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் அவர் கூறியதாவது, இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திரைக்கதையை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நான் திரைக்கதையை முழுமையாக வாசித்தேன். அதன் இரண்டாம் பாதியில் இன்னும் ஏதோ ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். வெங்கட் பிரபுவும் அதையே உணர்ந்து, அதற்காகச் சிறிது அவகாசம் கேட்டார். அப்பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, இத்திட்டம் தொடர்ந்து செயல்பாட்டிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..