ஹீரோவாக அறிமுகமாகும் சிறை பட நடிகர்.. டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

LK Akshaykumar Hero Debut Movie: தமிழ் சினிமாவில் பல அறிமுக நடிகர்கள் தங்களின் முதல் படத்தின் மூலமாகவே பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் சிறை படத்தில் அப்துல் என்று வேடத்தில் நடித்தவர் நடிகரும், தயாரிப்பாளரின் மகனுமான எல்.கே.அக்ஷய்குமார். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் புது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹீரோவாக அறிமுகமாகும் சிறை பட நடிகர்.. டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

எல்.கே. அக்ஷய்குமார் நியூ மூவி

Published: 

23 Jan 2026 13:18 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் எஸ்.எஸ்.லலித் குமார் (S.S.Lalith Kumar). இவர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் (Seven Screen Studios) என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தின் கீழ்தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ போன்ற பிரம்மாண்ட படங்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் இவரின் மகனான எல்.கே.அக்ஷய்குமார் (LK.Akshaykumar) தற்போது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu) நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியான “சிறை” (Sirai) என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் செகண்ட் ஹீரோ வேடத்தில் அப்துல் என்ற கைதி வேடத்தில் அவர் நடித்திருந்தார். இந்த் படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் சிறப்பாகவே ரசிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புது படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேலு (Vignesh Vadivelu) இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வை ரிலீஸ் எப்போது என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘டி55’ படத்திற்காக புது தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த தனுஷ்.. வெளியான அறிவிப்பு இதோ!

அக்ஷ்ய்குமார் கதாநாயகனாக நடிக்கும் புது படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பான பதிவு :

சிறை பட புகழ் அக்ஷய் குமாரின் புது பட டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது :

இந்த புது படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேலு இயக்கவுள்ளார். இந்த படத்தில் அக்ஷ்ய்குமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக டியூட் படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ஷர்மா நடிக்கவுள்ளாராம். ஜாபிரி சாதிக், ஷாரிக் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் நேற்று 2026 ஜனவரி 22ம் தேதியில் நடைபெற்றிருந்த நிலையில், ரசிகர்களிடையே இது தொடர்பான புகைப்படங்கள் வரவேற்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணையும் பிரபல நடிகை… யார் தெரியுமா?

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைக்கவுள்ளாராம். இந்த படமும் சிறை படத்தை போல கிராமத்து ஆக்ஷன் மற்றும் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கவுள்ளதாம். அந்த வகையில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் வரும் 2026 ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..