கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய பாடகி ஸ்வேதா மோகன்

Singer Shweta Mohan about Vijay Fans: தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஸ்வேதா மோகன். இவர் படகி சுஜாதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர் விஜய் ரசிகர்கள் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய பாடகி ஸ்வேதா மோகன்

பாடகி ஸ்வேதா மோகன்

Published: 

25 Jan 2026 19:25 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழகத்தில் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்திலும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் எப்படி நடிகர் தளபதி விஜயை கொண்டாடுகிறார்களோ அதற்கு சற்றும் குறையாமல் கேரளாவில் உள்ள ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். யார் பெரிய தளபதி ரசிகர்கள் என்று போட்டிப் போடும் அளவிற்கு கேரளாவில் விஜயின் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக இருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் போனது ரசிகர்களிடையே மாபெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த ஜன நாயகன் படத்தின் வெளியீட்டிற்காக கேரளாவிலும் தமிழகத்தை போல ரசிகர்கள் பல எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இப்படி மொரட்டு தளபதி ரசிகர்களாக இருக்கும் கேரள மக்கள் குறித்து பாடகி ஸ்வேதா மோகன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய பாடகி:

கேரளாவில் தளபதி விஜய் சாருக்கான கிரேஸ் வேறு லெவலில் இருந்தது. அதை நான் விளக்கவே தேவையில்லை. இதை நான் அவருடைய கேரள ரசிகர்களின் சார்பாகச் சொல்கிறேன். ஒருமுறை கேரளாவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எப்படியோ, அந்த நிகழ்ச்சியில் நான் விஜய் சார் பாடலை பாடவில்லை. நான் எப்படி அதை மறந்தேன் என்று எனக்கே நிஜமாகவே தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்தது, நாங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தோம், ஆனால் கூட்டம் கலையவில்லை.

விஜய் சார் பாடலைப் பாடாமல் நீங்கள் போக முடியாது என்று அவர்கள் சொன்னார்கள். நீங்கள் எப்படி இப்படிப் போகலாம்? விஜய் சார் பாடலைப் பாடாமல் எப்படிப் போகலாம்? என்று கோபமாகக் கேட்டார்கள். கடைசியில், நான் ஜிகுணமணி பாடலைப் பாடினேன். எல்லோரும் சேர்ந்து பாடினார்கள், எல்லோரும் நடனமாடினார்கள், அதன் பிறகுதான் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றார்கள். அவருடைய ரசிகர்கள் வெறித்தனம் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… மங்காத்தா படத்தால்தான் இப்படி ஆகிடுச்சு… எக்ஸ் தளத்தில் புலம்பும் மோகன் ஜி

இணையத்தில் வைரலாகும் பாடகி ஸ்வேதா மோகன் பேச்சு:

Also Read… Sivakarthikeyan: மெரினா படத்தின்போது பாண்டிராஜ் சார் கேட்ட விஷயம்- ஓபனாக சிவகார்த்திகேயன் பேச்சு!

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?