நா ஒத்த விரல் காட்டுனா ஒன்னாகும் கூட்டம்தான்… ரீ ரிலீஸாகும் சிலம்பரசனின் சூப்பர் ஹிட் குத்து படம்!

Silambarasan's Kuthu Movie Re Released In May Month: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் 22 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் குத்து. இந்தப் படம் அப்போதே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நா ஒத்த விரல் காட்டுனா ஒன்னாகும் கூட்டம்தான்... ரீ ரிலீஸாகும் சிலம்பரசனின் சூப்பர் ஹிட் குத்து படம்!

குத்து படம்

Published: 

04 Apr 2026 20:19 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குத்து. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கடேஷ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விஜயகுமார், லிவிங்ஸ்டன், கோட்டா சீனிவாச ராவ், கலாபவன் மணி, இளவரசு, பெசன்ட் ரவி, சுமன் செட்டி, கருணாஸ், மனோரமா, ரம்யா கிருஷ்ணன், மும்தாஜ், குயிலி, ஐஸ்வர்யா, கூல் சுரேஷ், ருது, கண்ணன் பொன்னையா, ராபர்ட், அசோக் ராஜா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த குத்து படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தெய்வானை மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கே.சி.என்.சந்திரசேகர் மற்றும் அமுதா துரைராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… Rachitha Mahalakshmi: அந்த படத்தில் நிறைய ட்ரோல்.. நான் பயங்கரமா அழுதேன் – மௌனம் உடைத்த ரச்சிதா!

ரீ ரிலீஸாகும் சிலம்பரசனின் சூப்பர் ஹிட் குத்து படம்:

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த குத்து படம் தற்போது 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடிப் படமாக உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் அப்போது கொண்டாடித் தீர்த்தது போல தற்போதும் கொண்டாடித் தீர்க்க உள்ளனர். ஆம் வருகின்ற மே மாதம் இந்த குத்து படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. முன்னதாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் பலப் படங்கள் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

Also Read… இந்த போட்டோவில் உள்ள குழந்தை யாருனு தெரிகிறதா? சீரியல் டூ பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. தற்போது சினிமாவில் நடிகை!

Follow Us
Related Stories
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஆயிரத்தில் ஒருவன் – புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்… இயக்குநர் செல்வராகவன்
கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்
ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் – விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
OTT Movie: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?
Vignesh Shivan: துப்பாக்கியில் விஜய் சார் சுட்டது 12 பேர்.. ஆனால் 13வது சுடப்பட்டவன் நான்- விக்னேஷ் சிவன்!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்