Silambarasan : மீண்டும் இணையும் வெங்கட் பிரபு – சிலம்பரசன் கூட்டணி.. விரைவில் மாநாடு 2 உருவாகிறதா?
Silambarasan And Venkat Prabhus Maanaadu Reunite : கோலிவுட் சினிமாவில் தனது சிறுவயது முதல் பல ரசிகர்களைத் தனது கைவசம் வைத்திருப்பவர் சிலம்பரசன். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக தக் லைஃப் வெளியானது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் மாநாடு 2 படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மாநாடு 2 திரைப்படம்
நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). கமல்ஹாசனின் (Kamal Haasan) எழுத்தில், இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கேங்ஸ்டராக நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார், STR 49, 50 மற்றும் 51 என அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் (Venkat Prabhu) மீண்டும் புதிய படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. அது வேறு எந்தப் படமும் இல்லை, மாநாடு 2 (Maanaadu 2) படம்தான். கடந்த 2021ம் ஆண்டு வெளியான மாநாடு படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்துடன் இப்படமும் உருவாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிலம்பரசனின் மாநாடு இன்ஸ்டாகிராம் பதிவு :
மாநாடு திரைப்படம் :
கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான படம்தான் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் டைம் லூப் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தில் முக்கிய வில்லன் ரோலில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்து அசத்தியிருந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படமானது ரூ.117 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் மாநாடு 2 திரைப்படமானது உருவாக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது உண்மையான என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சிலம்பரசனின் திரைப்படங்கள்
நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கவிருந்த STR 49 படமானது கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவிருந்த நிலையில், சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருந்தார். இந்த படமானது கைவிடப் பட்ட காரணத்தால்தான் வெற்றிமாறனுடன் புதிய படத்தில் சிலம்பரசன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தனது சொந்த தயாரிப்பில் சிலம்பரசன் STR 50 படத்தில் நடிக்கவுள்ளார். இதை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தை அடுத்ததாக டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 என்ற படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.