இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுமி எந்த நடிகை தெரியுமா? தமிழில் முதல் படத்திலே STR-க்கு ஜோடி!

Actress Childhood Photo: பான் இந்திய முழுவதும் பல்வேறு நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்கள். அந்த விதத்தில் அவர்களின் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகுவது உண்டு. அந்த விதத்தில் இந்த போட்டோவில் உள்ள சிறுமி எந்த நடிகை தெரியுமா?. விவரமாக பார்க்கலாம்.

இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுமி எந்த நடிகை தெரியுமா? தமிழில் முதல் படத்திலே STR-க்கு ஜோடி!

நடிகையின் சிறுவயது புகைப்படம்

Published: 

01 Apr 2026 08:42 AM

 IST

தமிழ் சினிமாவில் (Tamil Cinema) பல்வேறு நடிகைகள் இருந்தாலும், மாற்றமொழி நடிகைகளும் தமிழில் படங்கள் நடித்து பிரபலமாகுவது வழக்கமே. தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகள், தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டனர். அந்த விதத்தில் மேலே இருக்கும் போட்டோவில் உள்ள சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?. கன்னத்தில் குழியுடன், கியூட்டாக இருக்கும் இந்த சிறுமி யார் என பார்க்கலாம். இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலே நடிகர் சிலம்பரசனுக்கு (Silambarasan) ஜோடியாக நடித்தார். இந்த படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து தமிழில் படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் அவருக்கு அந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை.

இதுவரை தமிழில் இவர் சிம்பு, ஆர்யா (Arya), அருண் விஜய் (Arun Vijay) போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு மொழியிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி வேறுயாருமில்லை, நடிகை சித்தி இத்னானிதான் (Siddhi Idnani).

இதையும் படிங்க: நடிகை ரோஜாவின் பிரம்மாண்ட வீடு.. குக் வித் கோமாளி 7 சீசன் குழு வெளியிட்ட வீடியோ!

நடிகை சித்தி இத்னானி போட்டோஷூட் பதிவு:

சித்தி இத்னானியின் சினிமா பயணம் :

நடிகை சித்தி இத்னானி கடந்த 2017ம் ஆண்டில் வெளியான “கிராண்ட் ஹாலி” என்ற குஜராத்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் சிறு சிறு படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். அந்த விதத்தில் தமிழில் இவருக்கு முதல் பிரம்மாண்ட படமாக அமைந்தது “வெந்து தணிந்தது காடு”. 2020ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க, அடுத்து இவருக்கு பெரிய சறுக்கலை கொடுத்த படம் தி கேரளா ஸ்டோரி.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தை இறுதி படமாக அறிவித்தது ஏன்? ஷாமிடம் விஜய் சொன்ன விஷயம்!

இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை இவருக்கு கொடுத்தது. இதையடுத்து இவர் தொடர்ந்து, புது படங்களில் நடித்திருந்தாலும் வரவேற்பை கொடுக்கவில்லை. அந்த விதத்தில் இவர் இறுதியாக தமிழில், ரெட்ட தல என்ற படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தமிழில் தற்போது புதிய படம் ஒன்றிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..