3BHK : சித்தார்த் – சரத்குமாரின் ‘3BHK’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!

3BHK Trailer Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சித்தார்த். இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் 3BHK . இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

3BHK : சித்தார்த் - சரத்குமாரின் 3BHK படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு  வெளியிட்ட அறிவிப்பு இதோ!

3BHK திரைப்படம்

Published: 

25 Jun 2025 15:12 PM

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் (8 Thottakkal)  என்ற திரைப்படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ் (Shri Ganesh). இவரின் இயக்கத்தில் நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar) மற்றும் சித்தார்த் (Siddharth முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 3BHK. இந்த திரைப்படத்தில் முன்னணி கதாநாயகிகளாக நடிகைகள் தேவயானி (Devayani) மற்றும் குட் நைட் பட நடிகை மீத்தா ரகுநாத் (Meetha Raghunath) இணைந்து நடித்துள்ளார். இந்த 3BHK திரைப்படமானது முற்றிலும் குடும்ப கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பின் தேவயானி மற்றும் சரத்குமார் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். சூர்ய வம்சம் பட ஹிட் காம்போ மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தை 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படமானது பீல் குட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், படக்குழு ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த 3BHK படத்தின் ட்ரெய்லர் 2025, ஜூன் 26ம் தேதியில், காலை 11 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

3BHK திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்துப் படக்குழு வெளியிட்ட பதிவு :

சித்தார்த் மற்றும் சரத்குமாரின் கூட்டணி :

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படமாக இந்த 3BHK திரைப்படமானது , கடந்த 2024ம் ஆண்டு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில், சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீத்தா ரகுநாத் எனப் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் கதைக்களமானது வீடு கட்ட கஷ்டப்பட்டும் மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படமானது முற்றிலும் பீல் குட் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சூர்ய வம்சம் படத்தைத் தொடர்ந்து, பல வருடங்களுக்குப் பின் சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் என்பவர் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், வரும் 2025, ஜூன் 26ம் தேதியில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.