Shuti Haasan : தோல்விகளால் எனது தந்தை சோர்வடைந்ததில்லை – ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan About Kamal Haasans Film Failure : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் , பாடகியாகவும் இருந்து வருபவர் ஸ்ருதி ஹசன். இவர் தனது தந்தை கமல்ஹாசன், படங்கள் தோல்விகள் குறித்து ஒருபோதும் சோர்வடைந்ததில்லை என அவர் ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில் ப்ரீத்தி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் சலார் 2 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் கூலி படம் மற்றும் ரஜினிகாந்துடன் நடித்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து அவரின் தந்தை கமல்ஹாசனின் (Kamal Haasan) அரசியல் பயணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அரசியல் குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியிருந்தார். தொடர்ந்து தக் லைஃப் (Thug Life) படத் தோல்வி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்ருதி ஹாசன், தனது தந்தை ஒருபோதும் தோல்வியைக் கண்டு சோர்வடைந்ததில்லை என கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : எனக்கு சொந்தமில்லாததை நான் விட்டுவிட்டேன்… இணையத்தில் கவனம் பெறும் நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
தந்தை கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன் :
கமல்ஹாசன் பற்றிப் பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன் :
அந்த நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன், ” எனது தந்தை கமல்ஹாசன் படங்களின் வெற்றியைக் கொண்டாடியதும் இல்லை, தோல்வியால் துவண்டதுமில்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால், தோல்வி அவரை பாதித்தது இல்லை. தான் சம்பாதித்த பணம் மொத்தமாக சினிமாவில் முதலீடு செய்யும், சினிமா விரும்பி அவர். மேலும் அவர் உழைத்துச் சம்பாதித்த பணத்தை வைத்து ஆடம்பர பங்களாவோ, சொகுசு காரோ என அவர் ஒருபோதும் வாங்குவதற்கு ஆசைப்பட்டதும் இல்லை.
இதையும் படிங்க : மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் தகவல்
எல்லாவற்றையும் அவர் சினிமாவில்தான் செலவிடுவார். மேலும் அவர் மக்கள் நினைப்பது போல , நம்பர் கேம் என்ற வலைக்குள் அவர் சிக்கமாட்டார். அதுவும் அவரை எந்தவிதத்திலும் பாதிக்காது” என நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.