Balti Movie: ஷேன் நிகம் – சாந்தனுவின் ‘பல்டி’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Balti Movie Reviews: தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழி திரைப்படமாக வெளியாகியிருக்கிறது பல்டி. இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் ஷேன் நிகம் மற்றும் முக்கிய வேடத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்திருக்கின்றனர். இப்படமானது இன்று 2025 செப்டம்பர் 26ம் தேதியில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Balti Movie: ஷேன் நிகம் - சாந்தனுவின் பல்டி படம் எப்படி இருக்கு?  விமர்சனம் இதோ!

பல்டி பட விமர்சனங்கள்

Published: 

26 Sep 2025 14:25 PM

 IST

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் (Unni Sivalingam) இயக்கத்தில், தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகியிருக்கும் படம் பல்டி (Balti). இந்த படத்தில் முன்னணி ஹீரோவாக நடிகர் ஷேன் நிகம் (Shane Nigam) நடிக்க, மிக முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் சாந்தனு பாக்யராஜ் (Shanthanu Bhagyaraj) நடித்துள்ளார். இந்த் படத்தில் முக்கிய வில்லனாக இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) நடித்துள்ளார். இந்த பல்டி படத்தில் நடிகர் ஷேன் நிகமிற்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்திருக்கிறார். மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்திருக்கிறார். இதுதான் அவரின் முதல் மலையாள படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி கபடி கதை மற்றும் காதல் போன்ற கதைக்களத்தில் பல்டி படமானது உருவாகியிருந்தது.

இந்த படமானது இன்று 2025 செப்டம்பர் 26ம் தேதியில் வெளியாகியுள்ளது. இன்று காலை 9 மணி காட்சிகளுடன் தமிழகத்தில் இப்படமானது வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்.. டைட்டில் டீசர் அப்டேட் இதோ!

பல்டி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் பதிவு :

பல்டி படத்தை இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஒரு திடமான அறிமுகத்தைத் தருகிறார். மேலும் இப்படமானது 4 நண்பர்களைப் பற்றிய கதை. உணர்ச்சிகரமான தருணங்கள் பார்வையாளர்களை ஒரு நல்ல நிலைக்குத் தள்ளுகிறது, மேலும் கடைசி 30 நிமிடங்கள் பதற்றத்தை அதிகரிக்கின்றன என கூறப்படுகிறது.

நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கிறது :

இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பு முற்றிலும் மாறுபட்டு இருக்கிறதாம். இதில் ஷேன் நிகம் ஹீரோவாகவும், சாந்தனு கவனம் ஈர்க்கும் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இவர்கள் இருவர்தான் இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரம். மேலும் இப்படத்தில் வில்லனாக நடிகரும், இயக்குநருமான செல்வராகவன் நடித்துள்ளார். முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் நண்பர்களுக்கான கதைக்களம் கொண்ட படமாக இந்த பல்டி படம் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இட்லி கடை படம் அந்த பிரபலத்தின் கதையா? உண்மையை போட்டுடைத்த தனுஷ்!

பல்டி படத்தைத் திரையரங்கு சென்று பார்க்கலாமா?

இந்த பல்டி படமானது முழுவதுமாக ஆக்ஷ்ன், எமோஷன் மற்றும் நண்பர்கள் போன்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஆக்ஷ்ன் மற்றும் நண்பர்கள் சார்ந்த கதைக்களத்தை பிடித்தவர்கள் நிச்சயமாக இந்த படத்தை ஒருமுறை திரையரங்கு சென்று பார்க்கலாம். மொத்தத்தில் இந்த படத்திற்கு 5க்கு 4 மதிப்பு கொடுக்கலாம்.