என் மகன் சித்தப்பா தனுஷின் மிகப்பெரிய ரசிகர்… இயக்குநர் செல்வராகவன்

Selvaraghavan Viral Instagram Post: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். மேலும் தற்போது படங்களை இயக்குவது மட்டும் இன்றி தொடர்ந்து படங்களில் நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் வைரலகி வருகின்றது.

என் மகன் சித்தப்பா தனுஷின் மிகப்பெரிய ரசிகர்... இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட போட்டோ

Published: 

05 Jun 2025 13:21 PM

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் செல்வராகவன் (Director Selvaraghavan). இவரது இயக்கத்தில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் தான் இயக்குநர் செல்வராகவன். மேலும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தான் நடிகர் தன்ஷ். இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்குநராக அறிமுகம் ஆன துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். மேலும் இந்தப் படத்தில் தான் நடிகர் தனுஷ் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் இருவரும் சினிமாவில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் செல்வராகவனின் படங்கள் செய்திகளில் இடம் பெறுவது போல செல்வராகவனின் இன்ஸ்டாகிராம் பதிவும் அடிக்கடி செய்திகளில் இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவனின் இளைய மகன் டிவியில் தனுஷின் வாத்திப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் செல்வராகவனின் இன்ஸ்டா பதிவு:

அதில் என் மகன் அவனது சித்தப்பா தனுஷின் மிகப்பெரிய ரசிகன் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவி தற்போது இணையத்தில் அதிகமாக ரசிகர்களிடையே கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷின் வாத்திப் படம்…

இயக்குநர் செல்வராகவனின் மகன் தனது சித்தப்பா தனுஷின் வாத்திப் படத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக குபேரா படம் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!