Selvaraghavan: கருப்பு சாமியும் கன்று குட்டியும் கலங்க வைக்கிறது.. இட்லி கடையை பாராட்டிய செல்வராகவன்!
Selvaraghavan Praises Idli kadai Movie : தென்னிந்திய பிரபல நடிகர் மற்றும் இயக்குநராக இருந்துவருபவர் செல்வராகவன். இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் புதிய படங்கள் உருவாகிவரும் நிலையில், நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தை இயக்கியது குறித்து தனுஷை பாராட்டி பதிவிட்டுள்ளார்

இட்லி கடை படத்தைப் புகழ்ந்த செல்வராகவன்
கோலிவுட் சினிமாவில் தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் (Kasthuri Raja) மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன் (Selvaraghavan). இவரின் இயக்கத்தில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தயில் இன்றுவரையிலும் மதிக்கப்பட்டுவருகிற்து. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) படமானது இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது. அந்த வகையில், தற்போது இவர் மலையாள சினிமாவிலும் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவின் பல்டி (Balti) படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து 7/ஜி ரெயின்போ காலனி 2 (7/G Rainbow Colony 2) மற்றும் மெண்டல் மனதில் போன்ற படங்களை இயக்க, அதில் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இட்லி கடை (Idli Kadai) படத்தை பார்த்த இவர், நடிகர் தனுஷை (Dhanush) பாராட்டி எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க : பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதா? நடிகர் மேத்யூ தாமஸ் விளக்கம்!
தனுஷை பாராட்டி இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர்.
நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது !
வாழ்த்துக்கள் @dhanushkraja தம்பி !! pic.twitter.com/csabCRQ6dI— selvaraghavan (@selvaraghavan) October 11, 2025
இந்த பதிவில் இயக்குநர் செல்வராகவன், இட்லி கடை படத்தில் கருப்பசாமி மற்றும் கன்றுக்குட்டியின் காட்சிகள் கண்களைக் கலங்க செய்ததாகவும், தற்போதுதான் நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என்பது புரியவதாகவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் தனுஷிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் செல்வராகவன். இது தொடர்பான பதிவது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
செல்வராகவனின் புதிய திரைப்படங்கள் :
இயக்குநர் செல்வராகவன் படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், தற்போது படங்களையும் இயக்கிவருகிறார். நடிகர் ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் மெண்டல் மனதில் என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் 4வது கட்ட ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் இது தொடர்பான அப்டேட் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : பர்த்டே பாய் நிவின் பாலியின் ஓம் சாந்தி ஓஷானா படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ மிஸ் செய்யாமல் பாருங்க
மேலும் 7/ஜி ரெயின்போ காலனி 2 படத்தை இயக்கிவரும் நிலையில், இறுதிக்கட்டத்தில் இப்படம் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் ரவி கிருஷ்ணா மற்றும் நடிகை அனஸ்வர ராஜன் இணைந்து நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் டீசர் அப்டேட்டும் விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.