Sasikumar: யாத்திசை பட இயக்குநரின் படத்தில் சசிகுமார்.. வெளியான அப்டேட்!
Sasikumars Next Movie: தமிழில் இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமார். தொடர்ந்து புதிய படங்ககளில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் 2025 செப்டம்பர் 28 இன்று தனது 51வது பிறந்தநாளை சசிகுமார் கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு புது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சசிகுமாரின் புதிய திரைப்படம்
நடிகர் சசிகுமாரின் (Sasikumar) நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந்த் இயக்கியிருந்தார். கடந்த 2025 மே மாதத்தில் இந்த படமானது வெளியாகி மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் (Simran) நடித்திருந்தார். இலங்கை தமிழர்கள் குடும்பமாக இவர்கள் நடித்திருந்தனர். இந்த படமும் திரையரங்குகளில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து சசிகுமார் புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இன்று 2025 செப்டம்பர் 28ம் தேதியில் சசிகுமார் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவரின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி சசிகுமார் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான யாத்திசை (Yaathisai ) பட இயக்குநர் தரணி ராசேந்திரன் (Dharani Rasendran) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருக்க பெருமைப்படுகிறேன்.. ரேஸ் களத்தில் அஜித் பேச்சு!
சசிகுமாரின் புதிய திரைப்படம் குறித்தான அறிவிப்பு பதிவு :
Wishing the versatile Actor #Sasikumar a very Happy Birthday
On this special day, j.k film internation j.kamalakannan thrilled to announce that sasikumar has officially joined the cast of our upcoming film directed by Yaathisai fame Dharani Rasendran 🎬🔥 pic.twitter.com/XrGyboSpY2
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) September 28, 2025
சசிகுமாரின் புதிய படம் :
யாத்திசை என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர்தான் இயக்குனர் தரணி ராசேந்திரன். இவரின் இயக்கத்தில் தற்போது புதிய படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், இதை நடிகர் சசிகுமார் ஹீரோவாக இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : டிராகன் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து ஓபனாக பேசிய கயாடு லோஹர்
இந்த படத்தின் சசிகுமாருடன் நடிகர்கள் விடுதலை பட புகழ் நடிகை பவானி ஸ்ரீ, ஷிவதா மற்றும் நடிகர் சமுத்திரக்கனி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சசிகுமார் ராணுவ வீரன் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சசிகுமாரின் நடிப்பில் வெளியாகாவிருக்கும் படம் :
நடிகர் சசிகுமாரின் நடிப்பில் கடந்த 2025 ஜூலை மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம்தான் ஃப்ரீடம். இலங்கை அகதி போன்ற கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக இப்படம் தயாராகியிருந்தது. இந்த படத்தின் ரிலீஸின் போது பிரச்னைகள் தொடந்தநிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இன்றுவரையிலும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.