Freedom: மீண்டும் இலங்கைத் தமிழர்.. சசிகுமாரின் ‘ப்ரீடம்’ பட ட்ரெய்லர் இதோ!

Sasikumars Freedom Movie Trailer : நடிகர் சசிகுமாரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ப்ரீடம். இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் வரும் 2025, ஜூலை 10ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Freedom: மீண்டும் இலங்கைத் தமிழர்.. சசிகுமாரின் ப்ரீடம் பட ட்ரெய்லர் இதோ!

ஃப்ரீடம் திரைப்பட டிரெய்லர்

Published: 

03 Jul 2025 18:06 PM

தமிழ் திரைப்படங்களில் ஆரம்பத்தில் உதவி இயக்குநர், அதைத் தொடர்ந்து இயக்குநராக வலம்வந்தவர் சசிகுமார் (Sasikumar) . இவர் அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கினார். தனது இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கிய சசிகுமார், தற்போதுவரையிலும் முன்னணி நடிகராகப் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). அந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழராக சசிகுமார் நடித்திருந்தார். கடந்த 2025, மே 1ம் தேதியில் இப்படமானது வெளியாகி எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்து வந்த படம்தான் ப்ரீடம். இந்த படத்தை இயக்குநர் சத்யசிவா (Sathyasiva)  இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமாக இந்த ப்ரீடம் படமானது அமைந்துள்ளது.இந்த படத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ்  (Lijomol Jose) முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக அமைந்திருக்கும் இப்படமானது வரும் 2025, ஜூலை 10ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. சசிகுமார் நீண்ட நாட்களுக்குப் பின் முற்றிலும் அதிரடியாக இப்படத்தில் நடித்திருக்கும் நிலையில், ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

சசிக்குமாரின் ப்ரீடம் படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :

சசிகுமாரின் ப்ரீடம் பட ட்ரெய்லர் எப்படி இருக்கிறது :

நடிகர் சசிகுமார் முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த ப்ரீடம் திரைப்படமானது, இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இலங்கை அகதிகளாக இருக்கும் சசிகுமார் மற்றும் அவரின் குடும்பம் படும் இன்னல்களைக் குறித்து இப்படம் அமைந்திருக்கிறது. இலங்கையிலிருந்து அகதிகளாகத் தமிழகத்தில் நுழைந்த குடும்பத்திற்கு நடக்கும் இன்னல்கள், மேலும் போலீஸ் அதிகாரிகள் செய்யும் கொடுமைகள். மேலும் இந்த மொத்த இலங்கை அகதிகளையும் இந்த கொடுமையில் இருந்து, ஹீரோ சசிகுமார் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் மைய கருவாக இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இயக்குநர் சத்யசிவாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் படமாக இருக்கிறது. இந்தியா விஜய கணபதி பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்திருக்கிறது. வரும் 2025, ஜூலை 10ம் தேதியில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இன்னும் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளது. சசிகுமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றதோ, அதைப்போல இப்படமும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.