Aazhi Movie: சரத்குமார் ஆக்ஷன் வேடத்தில் நடித்த ‘ஆழி’.. வெளியானது அதிரடி ட்ரெய்லர்!
Aazhi Movie Trailer: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவரும் நிலையில், இவர் லீட் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆழி. இப்படமானது 2026 பிப்ரவரி 27ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ஆழி திரைப்பட டிரெய்லர்
கோலிவுட் சினிமாவில் பிரபல 90ஸ் நாயகனாக இருந்துவந்தவர் சரத்குமார் (Sarathkumar). இவர் தொடர்ந்து 90-களில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அந்த விதத்தில் இவர் தற்போது சினிமாவில் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாகியும் வருகிறது. கடந்த 2025ம் ஆண்டில் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் வெளியான டியூட் (Dude) படத்தில், மமிதா பைஜூவின் (Mamitha Baiju) அப்பாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியனுடன் (Shanmuga Pandian) கொம்புசீவி (Kombuseevi) என்ற படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அந்த விதத்தில் இவர் லீட் கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் “ஆழி” (Aazhi). இப்படத்தை இயக்குநர் மாதவ் ராமதாசன் (Madhav Ramadasan) எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜகஜித், தேவிகா சதீஷ், வையாபுரி, ஸ்ரீஜித் ரேவி போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதை முன்னிட்டு இன்று 2026 பிப்ரவரி 9ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதை சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் படம் திட்டமிட்டபடி நடக்கும் – அருண் மாதேஸ்வரன்!
நடிகர் சரத்குமார் பகிர்ந்த ஆழி படத்தின் ட்ரெய்லர் பதிவு:
The #Aazhi Trailer is OUT NOW 🌊 An intense ocean drama surges forward.
Watch here ▶️ https://t.co/BTACnXtdoX#Aazhi #AazhiTrailerOutNow @Aazhimovie @888production_ @realsarathkumar
@Madhavramadasan @udhayramakrish2 #SajitKrishnan #JassieGift #SreejithRavi… pic.twitter.com/Ui9oBBl6KV— R Sarath Kumar (@realsarathkumar) February 9, 2026
இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் கடலோர மீனவனாகவும், ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் பார்ப்பதற்கு, நெகடிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. இவரை தொடர்ந்து இப்படத்தில் அறிமுக நடிகர் இந்திரஜித் ஜெகஜித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தீபாவளி படம்!
இதில் அவர், சரத்குமாரின் மகளை காதலிப்பது போன்றும், அவரை இவர்தான் கொலை செய்வதுபோன்றும் இந்த ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சரத்குமார், இந்திரஜித் ஜெகஜித்தை பழிவாங்கினாரா? அல்லது இல்லையா? என்பதே இப்படத்தின் க்ளைமேக்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான இந்த ஆழி பட ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.