Samantha: அவள் உலக அழகியே.. ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சமந்தா – வைரலாகும் போட்டோஸ்!
Samantha Birthday Celebration: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் இன்று 2026 ஏப்ரல் 28ம் தேதியில், தனது 38வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். அந்த வகையில் தனது பிறந்தநாளை கொண்டாட கேக்குடன் வந்த ரசிகர்களுடன் இணைந்து, சமந்தா சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தென்னிந்திய சினிமாவில் ஒரு சிறப்பான நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் சமீபகாலமாக எந்த படங்களுமே வெளியாகவில்லை. அந்த வகையில் தற்போது மா இன்டி பங்காரம் (Ma Inti Bangaram) என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் லீட் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஹோ பேபி (oh Baby) திரைப்படத்தை இயக்கியிருந்த, இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இதை சமந்தா மற்றும் அவரின் கணவர் ராஜ்நிதி மோரு (Raj Nidimoru) இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படமானது மிகவும் சிறப்பான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அந்த வகையில் இப்படமானது வரும் 2026 மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது.
அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 28ம் தேதியில், தனது 38வது பிறந்தநாளை சமந்தா கொண்டாடிவருகிறார். அந்த வகையில் காலையிலிருந்து பல்வேறு பிரபலங்களும், அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுவந்தனர். அந்த விதத்தில் தனது ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி, தனது பிறந்தநாளை சமந்தா இஸ்ரபாக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிற்து.
இதையும் படிங்க: பர்த்டே ஸ்பெஷல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!
ரசிகர்களுடன் சமந்தா பிறந்தநாளை கொண்டாடியது தொடர்பான பதிவு:
The ever-charming #Samantha celebrates her birthday with her beloved fans ❤️✨
A heartwarming reunion after years, filled with smiles, love & unforgettable moments 🫶🥹#HBDSamantha #HappyBirthdaySamantha#MaaIntiBangaaram#MiB Grand Release worldwide on 15th May, 2026.… pic.twitter.com/XeWKPLf8q3— Balaji (@RDBalaji) April 28, 2026
மஞ்சள் நிற உடையில், தேவதையை போலவே நடிகை சமந்தா இந்த புகைப்படங்களில் இருக்கிறார். தனது அன்பான ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்திருந்தார். மேலும் பல ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போடும் கொடுத்திருந்தார். இவ்வாறு தனது ரசிகர்களின் முன்னிலையில், கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாக சமந்தா கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகபரவி வருகிறது.
இதையும் படிங்க: லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் – நடிகை சமந்தா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
நடிகை சமந்தாவின் புதிய திரைப்படம் :
சமந்தா ரூத் பிரபு, மா இன்டி பங்காரம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதில் நடிகை கௌதமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சமந்தா முழுக்க ஆக்ஷன் குடும்ப பெண்ணாக நடித்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேல் சமந்தாவின் நடிப்பில் இந்தத் படங்களும் வெளியாகாத நிலையில், இந்த மா இன்டி பங்காரம் படமானது சமந்தா ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமந்தாவிற்கு வெற்றிப்படமாக இது அமைய வாய்ப்புக்கள் அதிகம் என கூறப்படுகிறது.