சல்மான் கான் – வம்சி பைடிபைலி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது… அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Salman Khan and Nayanthara Movie Shooting Begins: பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தை இயக்குநர் வமிசி பைடிபைலி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சல்மான் கான் - வம்சி பைடிபைலி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது... அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

சல்மான் கான் - வம்சி பைடிபைலி படம்

Published: 

18 Apr 2026 17:52 PM

 IST

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தி சினிமாவில் பலப் படங்களில் நடித்து வந்தாலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தி சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர்கள் உள்ளனர். மேலும் சாதாரண மக்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்கள் பலரும் சல்மான் கானின் ரசிகர்களாக உள்ளனர். அதுகுறித்து பல பிரபலங்கள் பேட்டிகளில் வெளிப்படையாக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சல்மான் கானின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தொடர்ந்து நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியாகும் படங்களை இந்தி மொழியில் உள்ள இயக்குநர்கள் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் உள்ள இயக்குநர்களும் இயக்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சல்மான் கானை வைத்து படம் இயக்கி இருந்தார். அந்தப் படம் நல்ல வசூலைப் பெற்று இருந்தாலும் சல்மான் கானின் முந்தையப் படங்களை ஒப்பிடுகையில் குறைவான வரவேற்பையே பெற்ற காரணத்தால் அது தோல்வி படமாக மக்கள் பார்க்கத் தொடங்கினர்,

சல்மான் கான் – வம்சி பைடிபைலி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது:

இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள வம்சி பைடிபைலி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த இயக்குநர் வாரிசு படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். படம் தொடர்பான அப்டேட்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Ghilli: அப்படி போடு போடு போடு… 22 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய் – திரிஷாவின் கில்லி திரைப்படம்!

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Chiyaan Vikram: சியான் விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு வீடியோ இதோ!

Follow Us
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..