இதற்கு முன்னே எந்த படத்திலும் அதுபோன்று நடிக்கவில்லை.. டாக்சிக் படம் குறித்து பேசிய ருக்மிணி வசந்த்!
Rukmini Vasanth on Toxic Movie: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ருக்மிணி வசந்த். இவர் தற்போது உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து அசத்திவருகிறார். அந்த வகையில் கன்னட நடிகர் யாஷின் டாக்சிக் படத்தில் இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது குறித்த விவரமாக பார்க்கலாம்.

ருக்மணி வசந்த் டாக்சிக் திரைப்படம்
கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth). இவரின் நடிப்பில் கன்னட மொழியில் வெளியான “சப்த சாகரதாச்சே எல்லோ” ( Sapta Saagaradaache Ello) என்ற படத்தின் மூலம் கன்னட தென்னிந்திய மக்கள் வரை இவர் பிரபலமானார். இந்த படத்தை அடுத்தாக இப்படத்தின் பாகம் இரண்டிலும் இவர் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இதனை அடுத்து தெலுங்கு மொழியில் தொடர்ந்து புது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த விதத்தில் இவருக்கு முதல் தமிழ் திரைப்படமாக அமைந்தது ஏஸ் (Ace). நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2025 மே மாதத்தில் இப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் மதராஸி (Madharaasi) படத்தில் மாலதி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே ஈர்க்கப்பட்டிருந்தார்.
அந்த வகையில் இவர் தற்போது பல கோடி பட்ஜெட் படங்களிலும் நடித்துவருகிறார். அதில் ஒன்றுதான் டாக்சிக் (Toxic) திரைப்படம். நடிகர் யாஷ் நடிப்பில் பான் இந்திய படமாக இது உருவாகிவருகிறது. இப்படத்தில் ருக்மிணி வசந்தின் கதாபாத்திரத்தின் அனுபவம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் இறந்துவிடுமா? சுதா கொங்கரா பகிர்ந்த விஷயம்!
டாக்சிக் படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்த ருக்மிணி வசந்த் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ருக்மிணி வசந்தன், அதில் “நான் டாக்சிக் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நான், இதுவரை எந்த படத்திலும் நடித்திடாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும் இந்த படத்தில் நடித்த அனுபவம், இதுவரை நடித்த எந்த படங்களிலும் கிடைக்காத சவாலான அனுபவத்தை கொடுத்தது. இந்த படத்தில் எனது வேடம் உண்மையிலே கவர்ச்சிகரமாகவும், இதுவரை நான் அவ்வாறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: கூலி படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தது.. அதை அடுத்த படங்களில் தவிர்க்க முயற்சி செய்கிறேன்- லோகேஷ் கனகராஜ் பேச்சு!
அந்தளவிற்கு வித்தியாசமானது. மேலும் யாஷ் மற்றும் கீத்து இருவரும் இந்த படத்தை உருவாக்கும் விதம், ஸ்கிரிப்ட்கள் மற்றும் படப்பிடிப்பை நடத்திய விதம் எனக்கு ஒரு ஒப்பற்ற அனுபவத்தைக் கொடுத்தது என அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நடிகை ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :
நடிகை ருக்மிணி வசந்தின் கைவசத்தில் கிட்டத்தட்ட 3க்கும் மேற்பட்ட படம் உள்ளது. கன்னடத்தில் யாஷின் டாக்சிக், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் புது படம் மற்றும் தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவரின் தமிழ் படம் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.