ஆர்.ஜே. பாலாஜியின் காமெடி நிறைந்த சிங்கப்பூர் சலூன் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
Singapore Saloon Movie Streaming On Amazon Prime Video: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சிங்கப்பூர் சலூன். இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.

சிங்கப்பூர் சலூன்
தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சிங்கப்பூர் சலூன். காமெடி செண்டிமெண்ட் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் கோகுல் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்து இருந்தார். சத்யராஜ், லால், கிஷன் தாஸ், ஆன் ஷீடல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், திக்ஷா ராகவேந்திரன், என்.பாலமுருகன், சின்னி ஜெயந்த், சுரேஷ் சந்திர மேனன், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன், இமான் அண்ணாச்சி, இந்துமதி, கல்யா வெங்கடேசன், வினோத் முன்னா, குமார் நடராஜன், டேனியல் அன்னி போப், ஞான பிரசாத், டாஃப் நவீன், காக்கா முட்டை சாந்தி மணி, முகமது குரைஷி, அரவிந்த் சுவாமி, லோகேஷ் கனகராஜ், ஜீவா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும்வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சலூன் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்:
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் கிஷன் தாஸ் இருவரும் சிறு வயதில் இருந்தே நெறுங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சின்ன வயதி இருக்கும் போது அவர்களின் ஊரில் உள்ள முடி திருத்தும் லால் உடன் நல்ல பழக்கம் ஏற்படுகின்றது. லால் முடி திருத்தும் அழகைப் பார்த்து அவரைப்போலவே ஆக வேண்டும் என்று ஆர்.ஜே.பாலாஜி நினைக்கிறார். இதன் காரணமாக 12-ம் வகுப்பு முடித்த உடனே முடி திருத்தும் தொழிலுக்கு ஏற்ற படிப்பை படிக்க நினைக்கிறார்.
Also Read… எனது முந்தையப் படங்களை விட 10 மடங்கு கருப்பு சிறப்பாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி
ஆனால் அவரது அப்பா இஞ்சினியர் படிப்பை படிக்க வைக்கிறார். அந்த படிப்பை முடித்தப் பிறகு முடிதிருத்தும் வேலையை செய்ய நினைத்தால் அதையே செய் என்கிறார். அவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அந்த தொழிலை செய்ய நினைக்கிறார். பெரிய சலூனில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்யும் போதே மீனாட்சி சௌத்ரியை திருமணம் செய்துக்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து அவர் சொந்தமாக சலூன் வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் தொடர்ந்து அதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றது. இறுதியில் அவர் சலூனை வைத்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.
Also Read… கர படத்தில் தெலுங்கு டப்பிங் பேசியது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்