Karuppu: நான் கருப்பு படத்தை பான் இந்திய படமாக இயக்க நினைக்கல – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!
RJ Balaji About Karuppu Movie: தமிழில் வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு. இதை ஆர்.ஜே.பாலாஜி இயக்க, சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு படத்தை பான் இந்திய படமாக இயக்க நினைக்கவில்லை என தெரிவித்துள்ளர்.

கருப்பு படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி
இயக்குநர் சுந்தர் சியின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji). ஆரம்பத்தில் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், தற்போது லீட் நடிகராகவும், இயக்குநராகவும் வளர்த்துள்ளார். சுந்தர் சியின் (Sundar C) இயக்கத்தில் “தீயா வேல செய்யனும் குமாரு” என்ற படத்தின் மூலம் நுழைந்த இவர், தற்போது சூர்யாவுடன் படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவரின் இயக்கத்தில் சூர்யா (Suriya) கருப்பு (Karuppu) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), நட்டி நடராஜன், ஷிவதா, அனகா மாயா ரவி, யோகி பாபு, இந்திரன்ஸ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இனைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கு பிறகு திரைக்கு வருகிறது. இப்படம் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் இப்பட குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜி ஒரு உண்மையை உடைத்துள்ளார்.
இதையும் படிங்க: வசூலில் பட்டையை கிளப்பும் துரந்தர் 2.. தமிழகத்தில் எழுந்த சர்ச்சை என்ன தெரியும்?
கருப்பு திரைப்படத்தை பற்றி ஆர்.ஜே.பாலாஜி சொன்ன உண்மை :
அவர் அந்த நேர்காணலில் பேசுகையில், “நான் கருப்பு படத்தை பான் இந்திய படமாக இயக்கவேண்டும் என்ற கண்ணோடாட்டத்தில் நினைக்கவில்லை. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளை இயக்கும் ஒரு சிறப்பான தமிழ் படமாகவே இயக்க விரும்பினேன். நார்த் இந்தியாவின் வசூலை நினைத்து நான் இந்த படத்தை எடுக்கவோ, இந்தி நடிகர்களை நடிக்கவைக்கவோ விரும்பவில்லை.
இதையும் படிங்க: STR 51 படத்தில் சந்தானம் கேரக்டர் எப்படி இருக்கும் தெரியுமா? இயக்குநர் கொடுத்த அப்டேட்
என் நடிகர்கள் தமிழை புரிந்துகொள்ளவேண்டிப்பினும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அப்போதுதான், எனது நகைச்சுவை மற்றும் சரியான டைமிங்கில் காமடி போன்றவை கச்சிதமாக அமையும்” என அதில் ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து வெளியான பதிவு:
The signal gets stronger now – #Karuppu satellite rights with @ZeeTamil!✨
In theatres – May 14th, 2026.💫
A @SaiAbhyankkar Musical 🎶@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy #AnaghaMayaRavi… pic.twitter.com/jdUqYgZrqK
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 22, 2026
சூர்யாவின் கருப்பு படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 250 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், இதன் சாட்டிலைட் ரிலிஸ் உரிமை கிட்டத்தட்ட ரூ 40 முதல் 50 கோடிகளுக்கு விற்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.