என்னோட எல்.கே.ஜி படத்திற்கு ஓப்பனிங் சீன் பிரதீப் தான் எழுதுனது – ஆர்.ஜே.பாலாஜி

Director RJ Balaji Praised Pradeep Ranganadhan : சென்னையில் நேற்று லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் பிரியூ ஷோ நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பிரதீப் ரங்கநாதன் குறித்து புகழ்ந்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என்னோட எல்.கே.ஜி படத்திற்கு ஓப்பனிங் சீன் பிரதீப் தான் எழுதுனது - ஆர்.ஜே.பாலாஜி

எல்கேஜி

Updated On: 

08 Apr 2026 19:32 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியனா படம் எல்.கே.ஜி. லால்குடி கருப்பையா காந்தியின் சுருக்கமாகவே இந்தப் பெயர் உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் கே.ஆர்.பிரபு இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பிரியா ஆனந்த், ஜே.கே.ரித்தேஷ், ராம்குமார் கணேசன், நாஞ்சில் சம்பத், மயில்சாமி, மனோபாலா, சந்தான பாரதி, வருண், வினோதினி வைத்தியநாதன், ரெடின் கிங்ஸ்லி, விஜய் சிவன், அனந்த் வைத்தியநாதன், பிஜிலி ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் பொலிட்டிகள் சட்டையர் படமாக வெளியாகி இருந்த இந்த எல்கேஜி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்து இருந்தார். மேலும் அரசியல் கட்சியில் அரசியல்வாதிகள் என்ன எல்லாம் செய்து மக்களிடம் ஓட்டை பெறுவதற்காக முயற்சி செய்கிறார்கள் என்பதை மிகவும் காமெடியாக காட்டியிருந்தனர். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் செய்த பணி குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என்னோட எல்.கே.ஜி படத்திற்கு ஓபனிங் சீன் பிரதீப் தான் எழுதுனது:

அதன்படி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விழாவில் ஆர்.ஜே.பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், எல்கேஜி படத்தில், காதலர்கள் இருவரின் அலைபேசிகளை நான் மாற்றிக்கொள்ளும் அந்தத் தொடக்கக் காட்சியைப் பிரதீப் தான் எழுதினார். நான் அவருடைய படைப்புகளின் தீவிர ரசிகன். கருப்பு படப்பிடிப்பின்போது, ​​ரஜினி சார் அல்லது விஜய் சாரின் படங்களை எந்த அளவு உற்சாகத்துடன் பார்ப்போமோ, அதே அளவு உற்சாகத்துடன் நாங்கள் டியூட் படத்தைப் பார்த்தோம் என்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்து இருந்தார்.

Also Read… என் இயக்கத்தில் அந்தப் படம்தான் பிலாசபி பேசுதுனு நினைக்கிறேன் – இயக்குநர் பாலா

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு:

Also Read… நானும் சிவகார்த்திகேயனும் ஒரே விசயத்தை ஃபீல் பண்ணினோம் – சந்தோஷ் நாராயணன்

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?