அஜித் குமாரின் ரேஸிங் அணி.. ஸ்பான்சர்ஷிப் பார்ட்னராக இணைந்த ரிலையன்ஸ் நிறுவனம்’!

Ajith Kumar Racing: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் அஜித் குமார் கார் ரேஸிங் அணி இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்றுவருகிறது. இந்நிலையில் இந்த அணிக்கு ஸ்பான்சர்ஷிப்பாக ரிலையன்ஸின் கெம்பா எனர்ஜி கூல்டரிங்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

அஜித் குமாரின் ரேஸிங் அணி.. ஸ்பான்சர்ஷிப் பார்ட்னராக இணைந்த ரிலையன்ஸ் நிறுவனம்!

அஜித் குமார் மற்றும் முகேஷ் அம்பானி

Published: 

12 Nov 2025 20:45 PM

 IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், தனது ஆசையான கார் ரேஸ் (Car Race) போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நேரடியாக கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். அந்த வகையில் கடந்த 2924ம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போதுவரை கார் ரேஸ் போட்டிகள் மற்றும் பயிற்சியில் அஜித் குமார் தீவிரமாக இருந்துவருகிறார். இதுவரை தானாகவே இந்தியாவின் சார்பாக கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வந்தார்.

மேலும் விரைவில் ஆசிய லீ மான்ஸ் (Asian Le Mans ) ரேஸில் தனது அணியுடன் கலந்துகொள்ளவுள்ளார். இதுவரை எந்த ஸ்பான்சர்ஷிப் பார்ட்னர்களுடனும் சேராத அஜித் குமார், தற்போது “ரிலையன்ஸின் கேம்பா எனர்ஜி கூல்டரிங்ஸ்  நிறுவனத்துடன் (Reliance’s Campa Energy) அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்ஷிப் மேற்கொண்டுள்ளார். இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நீக் பட நடிகர் பவிஷின் புதிய படத்திற்கான டைட்டில் வெளியானது..!

அஜித் குமார் கார் ரேஸிங் உடன் ஸ்பான்சர்ஷிப் குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட பதிவு

இந்த பதிவில், “இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார்ஸ்போர்ட் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேசிங்குடன் தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, RCPL இன் முதன்மை எனர்ஜி டிரிங் பிராண்டான கேம்பா எனர்ஜி, அணியின் அதிகாரப்பூர்வ  பார்ட்னராக செயல்படும் எனவும் அறிவித்துள்ளது. இது தற்போது அஜித் குமாரின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனா சர்க்யூடில் பயிற்சியில் ஈடுபடும் அஜித் குமாரின் அணி :

நடிகர் அஜித் குமார் இதுவரை பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நான்கு 24H கா ரேஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டிருந்தனர். துபாய், இத்தாலி, ஐரோப்பா மற்றும் இதர நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் தனது அணியுடன் களமிறங்கினார். இதில் 3 போட்டிகளில் 3வது இடத்தையும், 1 போட்டியில் 2வது இடத்தையும் அஜித் குமாரின் அணி பெற்றிருந்தது.

இதையும் படிங்க: இது God-uh Mode-uh.. யூடியூப்பில் 23 மில்லியன் பார்வைகளை தாண்டிய சூர்யாவின் கருப்பு பட பர்ஸ்ட் சிங்கிள்!

இதனையடுத்ததாக அஜித் குமார் சமீபத்தில், “அஜித் ரெடான்ட் ரேஸிங்” என்ற தனது புதிய அணியை அறிமுகப்படுத்தியிருந்தார். இதை தொடர்ந்து ஆசிய லீ மான்ஸ் போட்டிக்கான பயிற்சியில் அஜித் குமாரின் அணி ஈடுபட்டுவருகிறது. அஜித் குமாரின் அணியானது ஸ்பெயின் , பார்சிலோனா சர்க்யூடில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.