கமலை திடீரென சந்தித்த ஜெயம் ரவி.. என்ன விஷயம் தெரியுமா?
Ravi Mohan Invited Kamal Haasan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் வருபவர் ரவி மோகன். இவர் நடிகராக படங்களில் நடித்துவரும் நிலையில், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில், இந்த புதிய நிறுவனத்தின் தொடக்கவிழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ரவி மோகன், கமல்ஹாசனை நேரில் சென்று அழைத்துள்ளார்.

ரவி மோகன் மற்றும் கமல்ஹாசன்
நடிகர் ரவி மோகன் (Ravi Mohna) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 2004ம் ஆண்டு, ஆரம்பகால கட்டத்தில் இவர் இளம் பெண்களின் நாயகனாக இருந்தார் என்றே கூறலாம். தொடர்ந்து தற்போது வரையிலும் இவர் முன்னணி கதநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ரவி மோகன் தற்போது நடிகராக இருந்து வரும் நிலையில், அதற்க்கு ஒரு படி மேலாக படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் (Ravi Mohan Studios) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருகிறார். இது குறித்த அறிவிப்பை நடிகர் ரவி மோகன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கவிழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தவுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகரும், மாநிலங்களவை எம்.பி-யுமான கமல்ஹாசனை (Kamal Haasan) நேரில் சென்று அழைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : படங்களில் நடிப்பதை குறைத்த சமந்தா.. காரணம் இதுதான்!
ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ பதிவு :
A legendary moment as @iam_RaviMohan invites Ulaganayagan @ikamalhaasan sir for the RMS Launch 🤩❤️#srminternationalrealestate @BoomCarsChennai @BrigadeGroup #RaviMohanStudios pic.twitter.com/dlMjYe4ujw
— Ravi Mohan Studios (@RaviMohanStudio) August 25, 2025
நடிகர் கமல்ஹாசனை நேரில் சென்று அழைத்த ரவி மோகன் அவருக்கு நினைவு பரிசாக, உயரமான போட்டோ ப்ரேமையும் வழங்கியிருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கவிழா, இன்று 2025, ஆகஸ்ட் 26ம் தேதியில் சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசனுடன் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க : சூரியின் அதிரடி ட்ரான்ஸ்பர்மேஷன்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
நடிகர் ரவி மோகன் கமல்ஹாசனை தொடர்ந்து, பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமாரையும் இந்த தொடக்கவிழாவிற்கு அழைத்திருக்கிறார். இதில் மேலும் பல அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் கீழ் உருவாகும் முதல் படம் :
நடிகர் ரவி மோகன் தொடங்கியிருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ப்ரோகோட் என்ற படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்க, ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த 2025, ஆண்ட இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.