சினிமாவில் 22 வருடங்களை நிறைவு செய்த ரவி மோகன்… வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

22 Years Of Ravi Mohan: கோலிவுட் சினிமாவில் நடிகர் ரவி மோகன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். கைவசம் பல பாடங்களை வரிசையாக வைத்துள்ள ரவி மோகன் தனது அடுத்தடுத்த படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். இந்த நிலையில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து 22 வருடங்கள் ஆனது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் 22 வருடங்களை நிறைவு செய்த ரவி மோகன்... வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

ரவி மோகன்

Published: 

21 Jun 2025 18:03 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி 22 வருடங்களை கடந்துள்ளது குறித்து நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் நடிகர் ரவி மோகன் தனது நடிப்பில் இதுவரை திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்களில் இருந்து தனது கதாப்பாத்திர புகைப்படங்கள் உள்ளது. மேலும் தான் நடிகராக அறிமுகம் ஆன ஜெயம் படத்தில் இருந்து வண்டி வண்டி ரயிலு வண்டி பாடலை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ஸ்டோரில் சிறந்த விஜயங்களுக்காக நன்றியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த ஸ்டோரியை ரசிகர்கள் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ரவி மோகன் நாயகனாக அறிமுகம் ஆனப் படம்:

சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகம் ஆனவர்கள் பலநூறு பேர் இருக்கிறார்கள். ஆனால் அதில் வெற்றியை அடைந்த நடிகர்கள் என்பது குறைவே. வாரிசாக அறிமுகம் ஆனாலும் தங்களது திறமையையும் கடின உழைப்பையும் கொடுக்கும் போதே அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சினிமாவில் எடிட்டராக இருந்த மோகனின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் ரவி மோகன். இவர் தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக ரசிகர்களிடையே பரிச்சையைம் ஆனார்.

நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு:

அந்தப் படத்தைத் தொடர்ந்து இவரை ரசிகர்கள் ஜெயம் ரவி என்றே அழைக்கத் தொடங்கினார். சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஜெயம் ரவியாகவே இவர் வலம் வந்தார். இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு தன் மீது அன்பும் பாசமும் வைத்து ஜெயம் ரவி என்று அழைத்த ரசிகர்களிடையே இனி ரவி மோகன் என்று என்னை அழைக்குமாறும் கோரிக்கை வைத்தார். அதன் பிறகே இவரை ரவி மோகன் என்று தற்போது ரசிகர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் ரவி மோகன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்கள்:

நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கு, தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேரான்மை, எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், கோமாளி, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு, சைரன், காதலிக்க நேரமில்லை என பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.