4 மாநில விருதுகளை வென்றது ரக்‌ஷித் ஷெட்டியின் 777 சார்லி படம்

777 Charlie movie: கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி. இவரது நடிப்பில் கன்னட சினிமாவில் வெளியாகும் பலப் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் வெளியான 777 சார்லி படத்திற்கு 4 மாநில விருதுகள் கிடைத்துள்ளது.

4 மாநில விருதுகளை வென்றது ரக்‌ஷித் ஷெட்டியின் 777 சார்லி படம்

777 சார்லி

Published: 

04 Oct 2025 18:42 PM

 IST

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி (Rakshit Shetty). இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நாயகனாக நடித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 777 சார்லி. இந்தப் படத்தில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி உடன் இணைந்து நடிகர்கள் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி. ஷெட்டி, டேனிஷ் சைட், ஷர்வரி, பாபி சிம்ஹா, எச்.ஜி. சோமசேகர் ராவ், பார்கவி நாராயண், கோபாலகிருஷ்ண தேசபாண்டே, தினேஷ் மங்களூரு, அபிஜித் மகேஷ், அனிருத் மகேஷ், விஜய் விக்ரம் சிங், பெங்களூரு நாகேஷ், சல்மான் அகமது, ஹரிணி, சித்தார்த் பட், பிரண்யா பி. ராவ், தன்ராஜ் சிவகுமார், கிரண்ராஜ் கே. மோனிதா பாலா, அனிருத் ராய் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

ரக்‌ஷித் ஷெட்டியின் நடிப்பில் கன்னட சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து கன்னட சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த 777 சார்லி படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விருதுகளை குவித்தது ரக்‌ஷித் ஷெட்டியின் 777 சார்லி படம்:

இந்தப் படத்தில் தர்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இருந்தார். சமூகத்தில் உள்ள எந்த மனிதன் மீதும் நம்பிக்கை இல்லாமல் யாருடனுடம் இணைந்து பழகாத தர்மாவின் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக சார்லி என்ற நாய் நுழைகிறது.

பின்பு அந்த சார்லியால் தர்மாவின் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் எல்லாம் நிகழ்கிறது என்பதே படத்தின் கதை. பொதுவாகவே நமது மக்களிடையே வளர்ப்பு நாய் என்றாலே பாசம் அதிகம். மேலும் இந்த மாதிரியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதும் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது கர்நாடக மாநில அரசிடம் இருந்து 4 விருதுகளைப் பெற்றுள்ளது. இது படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட் இதோ

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அண்ணாத்த படத்தில் சொன்னது வேற செஞ்சது வேற – குஷ்பூ ஓபன் டாக்