Coolie : விரைவில் ஓடிடியில் வெளியாகும் ரஜினிகாந்தின் கூலி… எப்போது தெரியுமா?

Coolie Early OTT Release : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமாக வெளியாகியிருந்தது கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படமானது 6 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், விரைவில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகிறது.

Coolie : விரைவில் ஓடிடியில் வெளியாகும் ரஜினிகாந்தின் கூலி... எப்போது தெரியுமா?

கூலி திரைப்படம்

Published: 

23 Aug 2025 22:48 PM

 IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் 6வது திரைப்படமாக வெளியான படம் கூலி (Coolie). இப்படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த கூலி படமானது முழுக்க அதிரடி ஆக்ஷ்ன்  படமாக அமைந்திருந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் ஆமிர் கான் (Aami khan) , உபேந்திரா, நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர் , சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் (Amazon Prime Video) நிறுவனம் பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்படமானது சுமார் 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 4 வாரங்களில் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறதாம். இந்த கூலி படத்திற்கு திரையரங்குகளில் வரவேற்புகள் குறைந்து வரும் நிலையில், 4 வாரங்களில் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இந்த கூலி படமானது வரும் செப்டம்பர் மாதத்தின் 2 வது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விஜய்யுடன் ஒரு படம்.. மிஸ்ஸான வாய்ப்பு – இயக்குநர் AR முருகதாஸ்!

கூலி படத்தின் கொக்கி பாடலை வெளியிட்ட படக்குழு

கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ்

இந்த கூலி படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இப்படமானது தமிழ், தெலுங்கு , இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்தது. மேலும் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வார் 2 படத்தின் வசூலை முந்தி சாதனை படைத்திருந்தது. இப்படமானது இதுவரை சுமார் ரூ 456 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : எனக்கு அதில் பிரச்னை இல்லை.. கூலி பட விமர்சனங்களுக்கு ஆமிர் கான் பதில்!

இந்த படமானது 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்டது.  தற்போது வரவேற்புகள் குறையும் நிலையில், 4 வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக கூலி படம் வரட்டும் 2025, செப்டம்பர் மாதத்தில் 13 அல்லது 14 ஆம் தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் கூலி படத்தின் இந்தி வெர்சன் (கூலி தி பவர் ஹவுஸ்) படமானது 8 வாரங்களுக்கு பின் வெளியாகலாம் என கூறப்படுகிறது.