Raghava Lawrence : எஸ்.ஜே. சூர்யாவின் மிகப்பெரிய கனவு.. கில்லர் படத்துக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து!

Raghava Lawrence congratulated SJ Suryah : தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர் எனப் பல பணிகளைச் செய்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவரின் நடிப்பில் பென்ஸ் படமானது உருவாகிவருகிறது. இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடிக்கவிருக்கும் கில்லர் படத்திற்கு, ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Raghava Lawrence : எஸ்.ஜே. சூர்யாவின் மிகப்பெரிய கனவு.. கில்லர் படத்துக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து!

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா

Published: 

30 Jun 2025 16:38 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா (SJ Suryah). இவர் ஆரம்பத்தில் தமிழில் உதவி இயக்குநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, முன்னணி இயக்குநராகப் படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) வாலி (Vaalee)  திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் (Vijay) இணைந்து குஷி  திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து தனது நியூ படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, பிற இயக்குநர் படங்களில் ஹீரோவாகவும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கத் தொடங்கினார்.  மேலும் இவர் தற்போது தமிழில் உருவாகும் பிரம்மாண்ட படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராக கில்லர் (Killer) என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் அவரே முன்னணி நாயகனாகவும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, ஜூன் 28ம் தேதியில் வெளியாகியிருந்தது. மேலும் அப்படத்தின் ஷூட்டிங் பூஜையும் அன்றே நடைபெற்றது. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) , எஸ்.ஜே. சூர்யாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.ஜே. சூர்யாவின் ஆசை குறித்தும் பேசியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸின் எக்ஸ் பதிவு :

அந்த பதிவில் நடிகர் ராகவா லாரன்ஸ், “இயக்குனராக நீங்கள் இயக்கவிருக்கும் கில்லர் படத்திற்கு எனது வாழ்த்துகள். இயக்குநராவதை விட, முன்னணி நடிகராகவேண்டும் என்பது தான் உங்களின் மிக பெரிய கனவு என்பது எனக்குத் தெரியும். மேலும் நீங்கள் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் இந்த கில்லர் படமானது, ஒரு ஹீரோவாக உங்களுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கட்டும்” என நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் திரைப்படம் :

10 ஆண்டுகளுக்குப் பின் எஸ்.ஜே. சூர்யா இயக்கவிருக்கும் படம் கில்லர். இந்த படத்தில் ஆவர் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025, ஜூன் 28ம் தேதி முதல் தொடங்கியது.

இந்நிலையில், இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது முழுவதும் வெளிநாடுகளில் படமாகப் படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..