தாய் கிழவி படத்திலிருந்து வெளியானது டெலீட்டட் சீன்
Thaai Kizhavi Movie Deleted Scene Out Now | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

தாய் கிழவி
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகும் அறிமுகம இயக்குநர்களின் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இந்தப் படத்தினை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்தார். இது தமிழ் சினிமாவில் அவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குநர் எழுதி இயக்கி இருந்தாலும் இந்த தாய் கிழவி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து இருந்தார்.
இவருடன் இணைந்து தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார். இந்தப் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. இந்தப் படம் சுமார் 50 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்தது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் வெற்றி விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தாய் கிழவி படத்திலிருந்து வெளியானது டெலீட்டட் சீன்:
இந்த நிலையில் தாய் கிழவி படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தில் இருந்து டெலீட்டட் காட்சியை படக்குழு வெளியிட்டு இருந்து. இந்த காட்சியில் ராதிகா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது மகன்கள் எப்படி எல்லாம் அவர் தங்களை கஷ்டப்பட்டு வளர்த்தார் என்பதை பேசி எமோஷ்னலாக அழும் காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A scene that’s emotional… yet hilariously funny! ❤️😂
Watch the #ThaaiKizhavi deleted scene ▶️ https://t.co/gzcBxylKKJ@Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl @PassionStudios_ @realradikaa @Dir_SivakumarM @archanakalpathi @aishkalpathi @nivaskprasanna… pic.twitter.com/7h8N5YT8F7
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 14, 2026
Also Read… Kara Movie: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் முதல் பாடல்.. படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!