Thaai Kizhavi: கிராமப்புற கலக்கல் காமெடியில்.. வெளியானது ராதிகா சரத்குமாரின் ‘தாய் கிழவி’ பட ட்ரெய்லர்!

Thaai Kizhavi MovieTrailer: நடிகை ராதிகா சரத்குமார் கதாநாயகியாக நடிக்க, வித்தியாசமான கதையில் தயாராகியுள்ள படம்தான் தாய் கிழவி. இப்படமானது வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின், கலக்கல் காமெடி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thaai Kizhavi: கிராமப்புற கலக்கல் காமெடியில்.. வெளியானது ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பட ட்ரெய்லர்!

தாய் கிழவி திரைப்பட டிரெய்லர்

Updated On: 

23 Feb 2026 17:42 PM

 IST

கோலிவுட் சினிமாவில் 1970 முதல் 90ஆம் ஆண்டுகள் வரை படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவந்தவர் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar). இவர் தமிழில் தற்போது சிறப்பு வேடங்களில் படங்களில் நடித்துவருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற நடிகர்களுக்கு அம்மா வேடத்தில் நடித்தும் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீப காலமாக படங்களில் சிறு வேடத்தில் நடித்துவந்த நிலையில், இவரே லீட் கதநாயகியாக நடித்துள்ள திரைப்படம்தான் தாய் கிழவி (Thaai Kizhavi). இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலமாக தான் இவர் தமிழில் இயக்குநராக நுழைந்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், பைசன் பட புகழ் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்த தாய் கிழவி படமானது கிராமப்புற கலக்கல் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதி முதல் தமிழ் மொழியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகிய ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டு நிலையில், இன்று 2026 பிப்ரவரி 23ம் தேதியில் இப்படத்தின் கலக்கல் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘கைதி 2’ பட புது டைட்டில் இதுவா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்!

தாய் கிழவி திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு:

தாய் கிழவி பட ட்ரெய்லர் எப்படி இருக்கிறது:

இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், “பவுனுத்தாயி” கிழவியாக நடித்துள்ளார். ஊரில் அடாவடி செய்யும் கிழவியாகவும், தில்லுடன் அனைவரிடமும் எதிர்த்து நிற்கும் கிழவியாகவும் இவர் நடித்துள்ளார். அவ்வாறு இருக்கும் ராதிகா, திடீரெனெ இறந்துவிடுகிறார். அதற்கு பின் நடக்கும் காமெடி மற்றும் எமோஷனல் கதையாக இப்படமானது தயாராகியுள்ளது. மேலும் இதில் சிவகார்த்திகேயனும் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தாய் கிழவி படத்தின் டிக்கெட் புக்கிங் :

இந்த தாய் கிழவி படத்தில் ராதிகா சரத்குமாருடன், நடிகர்கள் சிங்கம்புலி, இளவரசு, பாலா சரவணன் மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அழகிய லைலா… சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ரம்பா – வைரலாகும் செய்தி

முற்றிலும் கிராமப்புற எமோஷனல் காமெடி படமாக இது அமைந்துள்ளது. மேலும் இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதுவும் ரசிக்கப்பட்டுவருகிறது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங் ஏற்கனவே தொடங்கியுள்ளது. நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!