விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் கதையை மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார் வெங்கி அட்லூரி – ராதிகா சரத்குமார்
Radhika Sarathkumar talks about Vishwanath And Sons Movie: தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பலவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை ராதிகா சரத்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் தாய் கிழவி. கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் தக் லைஃப் பாட்டியாக நடித்து இருந்தார். இவரது கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி நடிகை ராதிகா சரத்குமார் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளார். இவரது இயக்கத்தில் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதையை சிறப்பாக எழுதியுள்ளார் வெங்கி அட்லூரி:
அதன்படி நடிகை ராதிகா சரத்குமார் அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெங்கி அட்லூரியின் ஒரு நல்ல கதையைக் கொண்டுள்ளது, ஆனால் சூர்யாவுக்கு கதாநாயகியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. மமிதா பைஜு ஒரு பொருத்தமான தேர்வாக இருந்தார், அவர் மிகவும் புரிந்துகொண்டு எங்கள் டெஸ்ட் ஷூட்டின்ஒத்திகையின் போது மிகச் சிறப்பாக நடித்தார் என்றும் ராதிகா சரத்குமார் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் ராதிகா சரத்குமார் பேச்சு:
#VishwanathAndSons has a very good story by #VenkyAtluri, but the heroine’s character to #Suriya is extremely important. #MamithaBaiju was an apt choice she was extremely grasping and performed very well during our test shoot rehearsal.
~ #Radhika
pic.twitter.com/TRnQHxcmjy— Movies Singapore (@MoviesSingapore) March 4, 2026
Also Read… அல்லு அர்ஜூன் வீட்டு திருமண விழாவில் பேசில் ஜோசஃப்… அப்போ கூட்டணி கன்ஃபார்மா?