Rachitha Mahalakshmi: சின்னத்திரையில் வாய்ப்புகள் வந்தால் சந்தோஷமாக செல்வேன்- ரச்சிதா மகாலட்சுமி பேச்சு!

Rachitha Mahalakshmi About Serials : தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகியாக நடித்து, தற்போது சினிமாவிலும் கதாநாயகியாக நடித்துவருபவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் தற்போது சினிமாவை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களிலும் நடிப்பதற்கு விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளர். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Rachitha Mahalakshmi: சின்னத்திரையில் வாய்ப்புகள் வந்தால் சந்தோஷமாக செல்வேன்- ரச்சிதா மகாலட்சுமி பேச்சு!

ரச்சிதா மகாலட்சுமி

Updated On: 

05 Mar 2026 16:47 PM

 IST

தமிழில் பிரபலமான சீரியல் நடிகையாக அனைவராலும் அறியப்படுபவர் ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் இவருக்கு முதல் அறிமுக சீரியலாக அமைந்தது, கன்னட மொழியில் 2007ம் ஆண்டில் ஒளிபரப்பான “மெகா மண்டலா” என்ற சீரியல். இதன் மூலம் சீரியல் வாழ்க்கையில் நுழைந்தார். இதன் பின் இவருக்கு தமிழிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கடந்த 2011ம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட “பிரிவோம் சந்திப்போம்” (Pirivom Santhippom) என்ற சீரியலில் ஜோதி என்ற வேடத்தில் நடித்து தமிழில், சீரியல் நடிகையாக நுழைந்தார். பின் சரவணன் மீனாட்சி (Saravanan Meenatchi) சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் சரவணன் மீனாட்சி சீசன் 3-யிலும், ரியோ ராஜுடன் (Rio Raj) இணைந்து நடித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், சன் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

தற்போது சினிமாவிலும் தனது நடிப்பை தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் ஃபயர் என்ற படமானது வெளியானது. இதில் இவர் நடித்த வேடம் பல விமர்சனங்களை இவருக்கு கொடுத்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இவர் கலந்துகொண்டிருந்தனர். அதில் சினிமாவில் நடிப்பது மற்றும் சீரியலில் நடிக்கும் ஆர்வம் குறித்தும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதியை முடிவு செய்தது ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படக்குழு

நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் பதிவு:

சீரியலில் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக ரச்சிதா மகாலட்சுமி பேச்சு:

சமீபத்தில் நேர்காணலில் பேசிய ரச்சிதா மகாலட்சுமி, அதில் “நான் குறைவான படங்களில் நடித்தாலும் ஆனந்தமாக நடித்துவருகிறேன், படத்தில் நடிகர்களுக்கு வெறும் ஜோடியாக மட்டும் நான் வந்துபோக விரும்பவில்லை. என் நடிப்பிற்கான தீனி கிடைக்கவேண்டும். அதற்கான தீனி இல்லாத இடத்தில் என்னால் வேலைபார்க்க முடியாது. என்னை வளர்த்த சின்னத்திரையை மிகவும் மிஸ் செய்கிறேன். சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதற்கு ஒத்துகொண்டால், படங்களில் நடிக்க நேரம் கிடைக்காது.

இதையும் படிங்க: யூத் பட கதை நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா என்னை ஹீரோவா ஏற்றுக்கொள்ளல – கென் கருணாஸ் வேதனை!

அவ்வாறுதான் தேடிவந்த படங்களின் வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறேன். தற்போதும் தமிழில் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தால் நிச்சயமாக, சந்தோஷமாக நடிப்பேன். ஏனென்றால் அங்கு எனது நடிப்பிற்கான தீனி அதிகமாகவே இருக்கும். மேலும் ஒரு நல்ல கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் சின்னத்திரையில் கிடைக்கும். சினிமாவில் இதற்கு போட்டி அதிகம் என்பதால், இந்த விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்” என அதில் தெரிவித்துள்ளார்.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி