போடுங்கம்மா ஓட்டு… வித்தியாசமான முறையில் புதிய படத்தை அறிமுகம் செய்த பார்த்திபன்!
R. Parthibans New Film Announcement: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குநர் என பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் ஆர். பார்த்திபன். இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருகிறது. அந்த வகையில் அரசியல் கதையில், தான் நடிக்கவுள்ள புதிய படத்தை அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர். பார்த்திபனின் புதிய படம்
கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து, அவரது படங்களில் சிறிய வேடங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தவர் ஆர்.பார்த்திபன் (R. Parthiban). பின் சினிமாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் (K. Bhagyaraj) இயக்கத்தில் வெளியான, “தாவணி கனவுகள்” என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக நடிகர் ஆர் . பார்த்திபன் தனது இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான, “புதிய பாதை” (Puthiya Padhai) என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை அடுத்ததாக, தனது இயக்கத்திலே, தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியிருந்தார். இவ்வாறு சினிமாவில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக நடிகர் பார்த்திபன் இருந்து வருகிறார். இவர் தமிழ் படங்களை தொடர்ந்து, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது இவர் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பையே , அரசியல் கட்சி தொடங்குவதுபோல அறிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அது இந்த படத்தின் அறிவிப்புதான் என தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் பிடிங்க : டைரக்டர் வெற்றிமாறன் டூ டாக்டர் வெற்றிமாறன் – பட்டம் வழங்கி கௌரவித்த ஐசரி கணேஷ்
ஆர். பார்த்திபனின் புதிய திரைப்படம் :
நடிகர் ஆர். பார்த்திபன் தொடர்ந்து, தனது இயக்கத்திலே படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர், “நான் தான் சி.எம்.” என்ற புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் ஆர். பார்த்திபன் C. M . சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், அரசியல் தலைவர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது? வெளியான அறிவிப்பு இதோ!
தற்போது வெளியான இந்த அறிவிப்பானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர், இந்த படத்திற்கு வைத்திருக்கும் டைட்டிலும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர். பார்த்திபன் வெளியிட்ட புதிய படத்தின் அறிவிப்பு
பெரியோர்களே, தாய்மார்களே,
வாக்காளப் பெருமக்களே!ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக்… pic.twitter.com/bh4dZHUuuK
— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 13, 2025
ஆர். பார்த்திபனின் புதிய படம் :
நடிகர் ஆர். பார்த்திபன், தனுஷின் இயக்கத்திலும், முன்னணி நடிப்பிலும் உருவாகியிருக்கும் இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் “அறிவு” என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.