விறுவிறுப்பாக நடைபெறும் புருஷன் படத்தின் ஷூட்டிங்… BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Purushan Movie BTS Video: தமிழ் சினிமாவில் பிசியாக நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார் சுந்தர் சி. இவர் தற்போது இயக்கி வரும் படம் புருஷன். இந்த புருஷன் படத்தின் BTS வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

புருஷன் படக்குழுவினர்
தமிழ் சினிமாவில் வெற்றிக் கூட்டணியாக உள்ளது இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆம்பள என்ற படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குநர் சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணி அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆக்ஷன் மற்றும் மத கஜ ராஜா ஆகியப் படங்களில் இந்தக் கூட்டணி அமைந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.
அதன்படி தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து வரும் படம் புருஷன். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த புருஷன் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் புருஷன் படத்தின் BTS வீடியோ:
இந்தப் படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து வரும் நிலையில் நடிகை தமன்னா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில் புருஷன் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட BTS வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தெறிக்கும் வெற்றி… திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது தலைவர் தம்பி தலைமையில் படம்
புருஷன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Peak #SundarC Entertainment loading 🎆
An exclusive behind-the-scenes peek from the sets of #Purushan.
Stay tuned for more ❤️🔥@benzzmedia @AcsArunkumar @VishalKOfficial @tamannaahspeaks @hiphoptamizha @iYogiBabu @khushsundar #AnanditaSundar @vichuviswanath @Venkatt_Ragavan… pic.twitter.com/OCwufdENB9
— Avni Cinemax (@AvniCinemax_) March 6, 2026