Kara Movie: கடைசி நேரத்தில் தனுஷின் கர படத்திற்கு வந்த சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனு!

Dhanushs Kara Faces Ban Threat: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் கர என்ற படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ளது. அந்த வகையில், இப்படத்தின் டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Kara Movie: கடைசி நேரத்தில் தனுஷின் கர படத்திற்கு வந்த சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனு!

கர பட டைட்டில் சர்ச்சை

Updated On: 

27 Apr 2026 19:24 PM

 IST

நடிகர் தனுஷின் (Dhanush) 54வது திரைப்படமாக வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் கர (Kara). இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்க, நடிகர் தனுஷ், மமிதா பைஜூ (Mamitha Baiju), சுராஜ் வெஞ்சாரமூடு, கருணாஸ், ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ப்ரித்வி போன்ற பலவாறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 27ம் தேதியில், சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court ) இப்படத்தினை தடைசெய்ய கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் இப்படத்திற்கு கர என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது ஏற்கனவே சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனம் (Salem Poovai Amman Film Production Company), உரிமையை பெற்றுள்ளதாகவும், அதை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகன் யாத்ரா ஹீரோவாக நடிக்கவுள்ளாரா? கேள்விகளுக்கு தனுஷ் கொடுத்த பதில்!

தனுஷின் கர திரைப்படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்:

நடிகர் தனுஷின் கர படத்தின் டைட்டிலை, சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனத்தின், தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, கர என்ற டைட்டிலை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பதிவு செய்துள்ளதாகவும். அந்த பெயரை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவிலே சிறந்த நடிகை சாய் பல்லவி.. ஏக் தின் படத்தை பார்த்து கண்கலங்கிய அமீர்கான்!

மேலும் கர என்ற டைட்டிலை மாற்றாமல், படத்தை வெளியிடக்கூடாது என்றும், படத்தின் ரிலீஸை தடைசெய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு எந்தவித அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.

கர திரைப்படத்தின் முன்பதிவு குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தனுஷின் கர படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங், இன்று 2026 ஏப்ரல் 27ம் தேதியிலிருந்து தொடங்கியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரு தினங்களே உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் தனுஷிற்கு ஒரு வெற்றி படமாக இந்த கர படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?